அங்குசம் பார்வையில் “ஸ்கூல்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

தயாரிப்பு & டைரக்டர் : ‘குவாண்டம் பிலிம் ஃபேக்டரி ‘ ஆர்.கே.வித்யாதரன். இணைத் தயாரிப்பு: கே.மஞ்சு. ஆர்டிஸ்ட்: யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார், பூமிகா சாவ்லா, பக்ஸ்(எ) பகவதி பெருமாள், சாம்ஸ்,நிழல்கள் ரவி,பிரியா வெங்கடேஷ் , ஆர்.கே.வித்யாதரன். பாடல்கள் & இசை: இசைஞானி இளையராஜா, ஒளிப்பதிவு: ஆதித்யா கோவிந்தராஜ், எடிட்டிங்: ராகவ் அர்ஸ், ஆர்ட் டைரக்டர்: ஸ்ரீதர். பி.ஆர்.ஓ: புவன் செல்வராஜ்

பரிட்சை ரிசல்ட்டில் இரண்டாம் இடத்தில் இருக்கும்  தனது  மெட்ரிகுலேஷன் பள்ளியை முதல் இடத்திற்குக் கொண்டு வர பிரின்ஸ்பால் பக்ஸுக்கு நெருக்கடி கொடுக்கிறார் பள்ளியின் ஓனரான கேபிள் சங்கர். உடனே பக்ஸ் “மைண்ட் செட் ஆஃப் சக்சஸ்’ என்ற புத்தகத்தை எழுதி மாணவர்களைப் படிக்கச் சொல்லிக் கட்டாயப்படுத்துகிறார். ஒரு நாள் லைப்ரரியில் அந்தப் புத்தகங்கள் மட்டும் மர்மமான முறையில் எரிகிறது. அதன் பின் சில மாணவர்களும் மாணவிகளும் ஒரு வேதியியல் ஆசிரியரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். ஏதோ சில கெட்ட ஆவிகள் பள்ளியைச் சுத்துகிறதுன்னு முடிவு பண்ணி டிஜிட்டல் சாமியார் உலகநாதனை [ டைரக்டர் வித்யாதரனே தான் ] அழைத்து வருகிறார் பக்ஸ்.

Sri Kumaran Mini HAll Trichy

“ஸ்கூல்’ “ஆமா… இங்க இருக்கு…ஏதோ கெட்ட ஆவி  இருக்கு. அதை அடிச்சு விரட்டுறேன்”ன்னு களத்துல இறங்குகிறார் உலகநாதன். ஆனா அவரையே அடிச்சு விரட்டுது ஆவிகள். அப்பதான் அவருக்குத் தெரியுது, இதெல்லாமே கெட்ட ஆவிகளை காண்ட்ராக்ட் எடுத்திருக்கும் மஸ்தானின்[நிழல்கள் ரவி] வேலைன்னு. இந்த நேரத்துல தான் அந்த ஸ்கூலில் ஏற்கனவே வேலை பார்த்த ஆசிரியர்களான பூமிகா சாவ்லாவும் யோகிபாபுவும் மீண்டும் அந்த ஸ்கூலுக்கு வருகிறார்கள்.

இதெல்லாம் ஆவியோட வேலையில்லை, பாவி பக்ஸ் எழுதிய அவநம்பிக்கைப் புத்தகம் தான் காரணம்னு கண்டு பிடிக்கிறார்கள். வெற்றி—தோல்வி என்ற வார்த்தைகளுக்குப் பதிலாக ‘எக்ஸ்பீரியன்ஸ் & காண்ட்ரிபியூஷன்’ [ அனுபவம் & பங்களிப்பு ] என்ற புது நம்பிக்கையை மாணவர்களிடையே விதைத்து, சர்ட்டிபிகேட்டில் சாதி-மதம் தேவையில்லை என்பதை மாணவர்களை வைத்தே சொல்லச் சொல்கிறார்கள்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

இதையெல்லாம் எழுத்துல படிக்கிறதுக்கு நல்லாருக்குல்ல. ஸ்கீரின்லயும் இதெல்லாமே இருபது நிமிடங்கள் தான்.  ஆனா மீதி இரண்டு மணி நேரம் பத்து நிமிசம் நம்ம டைரக்டரும் தயாரிப்பாளருமான வித்யாதரன் என்ன பண்ணிருக்காருன்னா மூடநம்பிக்கைகளை லாரி, லாரியா இறக்கி, ஆவிகளைவிட மோசமான படுபாவியாகி, நம்மள ஓடவிட்டுட்டாரு. க்ளைமாக்ஸ் காளி பூஜை வரைக்கும் நம்மள கதற வச்சுட்டாரு.

“ஸ்கூல்’ இன்ஸ்பெக்டராக கே.எஸ்.ரவிக்குமார், சக வாத்தியாராக சாம்ஸ், இடைவேளைக்குப் பிறகு எண்ட்ரியாகும் யோகிபாபு, பூமிகா சாவ்லா எல்லாரும் ஓகே தான். “தாஸ்..தாஸ்…சின்னப்பதாஸ்…” பாட்டை இப்ப உள்ள மாணவர்களுக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக வார்த்தைகளைப் போட்டு ரீடியூன் போட்ட இசைஞானியின் பாடல் ரசிக்க வைக்கிறது. இந்தப் படத்துக்கு இதுபோதும் என்ற லெவலில் பின்னணி இசையைக் கொடுத்துள்ளார்.

பில்டிங், ரோடு, பாலம், வாட்டர்டேங்க் காண்ட்ராக்ட் எடுப்பதைப் பார்த்துக்கிட்டிருக்கோம். ஆனா ஒரு ஸ்கூலையே அழிக்க ஆவிகளை காண்ட்ராக்ட் எடுக்கும்  கொடுமையை இப்பத்தான்யா பார்க்குறோம். இதைவிடக் கொடுமை என்னன்னா.. ஒரு சீனில் “நாத்திகத்தை உருவாக்குனதே கடவுள் தான்”னு வித்யாதரன் போட்டாரு பாருங்க ஒரு போடு, நமக்கு ஈரக்குலையே நடுங்கிப் போச்சு.

விமர்சனமும் முடிஞ்சு போச்சு.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.