இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சாதித்த ! ரயில்வே தொழிற்சங்க தலைவர் மகன் !
ரயில்வே ஊழியர் மற்றும் தொழிற்சங்க தலைவர் மகன் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் சாதனை தென்னக ரயில்வே தொழிலாளர்கள், மக்கள் சக்தி இயக்கம் மற்றும் பொதுமக்கள் சார்பில் பாராட்டுக்களும், வாழ்த்துக்களும் தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த விஞ்ஞானி வீர முத்துவேல்
விழுப்புரம் மாவட்டத்தில் ரயில்வே ஊழியரும், திருச்சி கோட்டத்தில் தங்கி ரயில்வே தொழிற்சங்க தலைவராக பணி புரிந்தவருமான பி.பழனிவேல் மகனாக பிறந்தவர் வீரமுத்துவேல் , ரயில்வே பள்ளியில் படித்தவர் .
‘சந்திரயான்-3 திட்டத்தை வெற்றிகரமாக சோதித்ததன் மூலம் இந்தியா படைத்துள்ளனர். அடைந்த சாதனையை நாட்டில் உள்ள அனைவரும் அறிந்து உள்ளனர். இருந்தாலும், திட்டத்தின் பின்னணியில் உள்ள மூளை பலருக்கு தெரியாது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இஸ்ரோ மூத்த விஞ்ஞானி பி. வீரமுத்துவேலின் சிந்தனையில் உருவானதுதான் இந்த திட்டம். இவருடைய திறமை யையும்,நிபுணத்துவத்தையும் வெளிப்படுத்தியதால், ‘சந்திரயான்-3’ன் தலைவராகவும், தற்போது நிலவு பயணத்தின் திட்ட இயக்குனராகவும் நியமிக்கப்பட்டு பணியாற்றி வருகிறார்.
விஞ்ஞானி வீர முத்துவேல் விழுப்புரம் மாவட்டத்தில் ரயில்வே ஊழியரான P.பழனிவேலுக்கு மகனாக பிறந்தவர் வீர முத்துவேல். ரயில்வே பள்ளியில் படித்து, தொழிற்கல்வி படிப்பை விழுப்புரத்தில் பயின்ற வீரமுத்துவேலுக்கு விண்வெளி துறையில் சாதிக்க வேண்டும் என்கிற ஆசை இருந்துள்ளது.
இதற்காக தொழிற்கல்வி படித்து விட்டு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்த வீரமுத்துவேல், தாம்பரத்தில் உள்ள தனியார் கல்லூரியொன்றில் பொறியியல் படித்துள்ளார். பின்னர் முதுநிலையை REC-திருச்சில் முடித்து HAL-பெங்களூர் பணியில் சேர்ந்த சில மாதங்களில் ISRO-விஞ்ஞானியாக சேர்ந்தார்.
பின்னர் பணியில் இருந்து கொண்டே ஆராய்ச்சி படிப்பை சென்னை ஐஐடியில் முடித்த வீரமுத்துவேல், தொழிற்கல்வியிலிருந்து ஆராய்ச்சி படிப்பு வரை வெவ்வேறு வகையான சூழல்களோடு வளர்ந்தார். இவர், ‘சந்திரயான்-2’ திட் டத்திலும் முக்கியமான பங்கை வகித்தவர். அந்த திட்டம் முழுமையாக வெற்றி பெறுவதற்கு அங்குலங்கள் நெருங்கியபோது, திட்டத்தின் பின்னணியில் உள்ள வாய்ப்புகள் மற்றும் அறிவியல்குறித்து நாசாவுடன் ஒருங்கிணைத்தவர் என்பது குறிப்பித்தக்கது.
விஞ்ஞானிகள் சாதனை மறைந்த ஜனாதிபதி ஏ.பி.ஜெ.அப்துல்கலாம். சிவதாணுபிள்ளை, மயில்சாமி அண்ணாதுரை, சிவன், வனிதா முத்தையா ஆகியோர் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தில் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர் .
இந்த நிலையில் தற்போது மேலும் ஒரு தமிழரான 41 வயதான வீரமுத்துவேல் இந்த வரிசையில் இடம்பிடித்து , தமிழ்நாட்டுக்கு பெருமை, இவரின் தந்தை ரயில்வேயில் பணி புரிந்தார் என்பது ரயில்வே தொழிலாளருக்கும் பெருமையாக உள்ளது.