தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாட்டில் கவியரங்கம், கருத்தரங்கம், நூல்கள் வெளியீடு !
தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாட்டில் கவியரங்கம், கருத்தரங்கம், நூல்கள் வெளியீடு
அந்தமான் தமிழ் சங்கத்தோடு இணைந்து தூண்டில் ஹைக்கூ இதழ், இனிய நந்தவனம் மாத இதழ், தமிழ் ஹைக்கூ கவிதையாளர்கள் இயக்கம் இணைந்து நடத்திய தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாட்டில் மூன்று அமர்வுகள் நடைபெற்றன. கவிஞர் ம.திருவள்ளுவர் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் கவிஞர்கள் கி.மூர்த்தி, சுமதி சங்கர், கவிதா பிருத்வி, கவிஞர் காரா ஆகியோர் தங்கள் கவிதைகளை வாசித்தளித்தனர்.
அந்தமான் தமிழ் இலக்கிய மன்றம் செயலாளர் செந்தில் தமது கவிதைகளை வாசித்தார். ஹைகூவும் நானும் என்கிற மையப்பொருளில் கவிச்சுடர் கா.ந. கல்யாணசுந்தரம் அவர்கள் தலைமையில் நடைபெற்ற கருத்தமர்வில் ஹைக்கூ கவிதைகள் அழகியலிலும் சமூக புரிதலிலும் தங்களுக்கு ஏற்படுத்திய தாக்கங்களையும் ஹைக்கூ கவிதையாளர்களாக ஆய்வாளர்களாக தங்களுடைய அனுபவ உரைகளை கவிஞர் சகா, முனைவர் ஔவை நிர்மலா, கவிஞர் பா.தென்றல், முனைவர் ஜா.சலேத், கவி வெற்றிச்செல்வி, பிரேமா கிறிஸ்டி ஆகியோர் தங்கள் அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டனர்.
கல்வியாளர் எமர்சன் தலைமையில் நடைபெற்ற என் பார்வையில் தமிழ் ஹைக்கூ என்கிற அமர்வில் முனைவர் கோ.நாராயணமூர்த்தி, கவிஞர் மூரா, எழுத்தாளர் கவிப்பித்தன், கவிஞர் பாரதிவாணர் சிவா, கவிஞர் நிக்கி கிருஷ்ணமூர்த்தி, எழுத்தாளர் அ.ந.சாந்தாராம் உள்ளிட்டோர் தாங்கள் படைத்த, வாசித்த ஹைக்கூ கவிதைகள் குறித்தும், ஹைக்கூ கவிதைகள் ஏற்படுத்துகிற அனுபவங்கள் அதிர்வுகள் குறித்தும் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து நூல் வெளியீடுகள் நடைபெற்றன. அந்தமானில் நடைபெற்ற தமிழ் ஹைக்கூ இரண்டாவது உலக மாநாட்டில் கவிஞர் அவ்வை நிர்மலா எழுதிய முகில் பூக்கள் என்கிற நூலை அந்தமான் தமிழர் சங்கத் தலைவர் எல்.மூர்த்தி வெளியிட கவிஞர் தங்கம் மூர்த்தி பெற்றுக்கொண்டார்.
கவிஞர் கவிதா பிருத்வி எழுதிய ஓவியம் வரையும் தூரத்து நிலா அந்தமான் தமிழர் சங்கத் தலைவர் எல்.மூர்த்தி வெளியிட கவிஞர் தங்கம் மூர்த்தி வெளியிட முனைவர் கோ.நாராயணமூர்த்தி பெற்றுக் கொண்டார்.