அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

“சீமானின் ‘தர்மயுத்தம்’ சத்தியமா இது அரசியல் படம் இல்லை” – சொல்கிறார் மூன் பிக்சர்ஸ் ஆதம்பாவா!

0

திருச்சியில் அடகு நகையை விற்க

தப்பாட்டம்’, ‘ஆண்டி இண்டியன்’, ‘உயிர் தமிழுக்கு’ ஆகிய வெற்றிப் படங்களைத் தொடர்ந்து இயக்குநர், தயாரிப்பாளர் மூன் பிக்சர்ஸ் ஆதம் பாவா மற்றும் பிளானெட் 9 பிக்சர்ஸ் மருத்துவர் இரா.க. சிவக்குமார் இணைந்து தயாரித்திருக்கும் படம் சீமானின் ‘தர்மயுத்தம்’

ஒரு கொலை அதன் பின்னணி மர்மங்கள், அது தொடர்பான சம்பவங்கள் என இன்வெஸ்டிகேசன் க்ரைம் த்ரில்லராக மலையாள சினிமா பாணியில் உருவாகியுள்ள இப்படத்தை இரா.சுப்ரமணியன் எழுதி இயக்கியிருக்கிறார்..

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

இப்படத்தில்  சீமான் மற்றும் ஆர்.கே. சுரேஷ் இணைந்து நடிக்க, மலையாளத் திரையுலகில் பிரபலமான அனு சித்தாரா நாயகியாக நடித்திருக்கிறார்.

இவர்களுடன் இளவரசு, எம்.எஸ்.பாஸ்கர், வெற்றிக் குமரன், சாட்டை துரை முருகன், ஜெயக்குமார், ஆதிரா பாண்டிலட்சுமி, சௌந்தர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

https://www.livyashree.com/

சீமானின் ‘தர்மயுத்தம்'இப்படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரை சமீபத்தில், இயக்குநர்கள் சேரன், சுந்தர்.சி, சீனு ராமசாமி, எச்.வினோத், சசிகுமார், தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி, நடிகர்கள் சிவகார்த்திகேயன், சூரி, பிரதீப் ரங்கநாதன் மற்றும் நடிகை கஸ்தூரி ஆகியோர் தங்களது சோஷியல் மீடியா பக்கங்களில் வெளியிட்டனர்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தென்காசி, குற்றாலம், திண்டுக்கல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில்  உருவாகியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

படம் குறித்து தயாரிப்பாளர் ஆதம் பாவா என்ன சொல்றாருன்னா “இதற்கு முன்பு என் தயாரிப்பில் ஆன்டி இண்டியன் மற்றும் உயிர் தமிழுக்கு ஆகிய இரு படங்களும் முழுக்க முழுக்க அரசியல் பின்னணியில் உருவாகியிருந்தது. ஆனால் இந்த  தர்மயுத்தம் படத்தில் அரசியல் கட்சித்தலைவரான  சீமான் நடித்திருந்தாலும், இது துளி கூட அரசியல் இல்லாத படம் என்பது தான் ஹைலைட்.

சீமானின் ‘தர்மயுத்தம்’
சீமானின் ‘தர்மயுத்தம்’

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

சீமான் நேர்மையான காவல்துறை அதிகாரியாகவும் ஆர்.கே.சுரேஷ் இதுவரை ஏற்காத ஒரு வித்தியாசமான கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள். மீண்டும் சொல்றேன், சத்தியமா இது அரசியல் படம் இல்லை ” என்கிறார்.

*தொழில்நுட்பக்குழு*

ஒளிப்பதிவு :செழியன்,

இசை: விஷால் சந்திரசேகர் ,

பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து,

படத்தொகுப்பு: புவன் சீனிவாசன்,

கலை இயக்குநர்: மாயப்பாண்டி

தயாரிப்பு நிர்வாகி: முத்.அம்.சிவக்குமார்,

மக்கள் தொடர்பு: அ.ஜான்

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.