துறையூரில் கெட்டுப்போன 150 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல்
துறையூரில் கெட்டுப்போன 150 கிலோ ஆட்டு இறைச்சி பறிமுதல்
திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியில் உள்ள இறைச்சிக் கடைகளில் நகராட்சி சுகாதார அதிகாரி மூர்த்தி, உணவு பாதுகாப்பு அதிகாரி ரங்கநாதன் ஆகியோர் திடீர் ஆய்வு செய்தனர்.
இதில், சிக்கம்பிள்ளையார் கோவில் அருகிலுள்ள காந்தி ரோட்டில் சுரேஷ் என்பவர் குளிர்சாதனப் பெட்டியில் கெட்டுப்போன இறைச்சிகள் அடிக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதிலிருந்து சுமார் 150 கிலோ எடையுள்ள கெட்டுப் போன ஆட்டு இறைச்சியை பறிமுதல் செய்து அவற்றை அழித்தனர் .
மேலும் கடை உரிமையாளர் சுரேஷ் என்பவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது . மேலும் விசாரணையில் இவரிடம் இருந்து துறையூர் நகரில் உள்ள பல அசைவ உணவகங்களுக்கு இறைச்சி விற்பனை செய்து வருவதாகத் தெரிய வருகிறது. கெட்டுப்போன ஆட்டிறைச்சியை அதிக அளவில் பறிமுதல் செய்துள்ளதால் , துறையூர் நகரிலுள்ள அசைவப் பிறியர்களின் வயிற்றில் புளியைக் கரைத்துள்ளது.
மேலும்இது பற்றிக் கூறிய அதிகாரிகள், தொடர்ந்து இது போன்ற ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் எனவும் ,தரமற்ற இறைச்சிகளை விற்பனை செய்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்தனர்.
இது போன்ற தவறுகள் நடைபெறாமல் இருக்க நகரில் உள்ள இறைச்சிக் கடைகளில் நகராட்சி மூலம் உத்தரவு வழங்கி அதன் பிறகு அந்த இறைச்சிகளை விற்பனை செய்ய அனுமதிக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.