அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

போலி நகை விற்பனை ! அடித்து கொலை செய்யப்பட்ட சாலையோர வியாபாரி !

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தேனி அருகே போலி நகை விற்பனை செய்ததாக கூறி பெங்களூரை சேர்ந்த சாலையோர வியாபாரிகள் இரண்டு பேரை  கடத்தி அடித்து துன்புறுத்திய நிலையில் ஒருவர் பலி.

போலீசாரிடம் சிக்காமல் இருக்க உயிரிழந்த நபரை தோட்டத்தில் புதைத்த கொடூரம். புதைக்கப்பட்ட உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை – 7 பேரை கைது செய்து  போலீசார் விசாரணை.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

கர்நாடக மாநிலம் பெங்களூர் பகுதியைச் சேர்ந்தவர் திலீப் (40) இவரும் இவரது சகோதரி மகன் கழுவாவும் (37) தேனி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் அலங்காரத்திற்கு வைக்கும் கண்ணாடி பொருட்களை விற்பனை செய்து வந்தனர்.

சாலையோர வியாபாரி கொலைஇவர்களுக்கு ஆண்டிபட்டியை சேர்ந்த மோகன் என்பவர்  அறிமுகமாகியுள்ளார். அப்போது மோகனிடம் போலி நகைகளை விற்பனை செய்ததாக இருவரையும் தேனி புதிய பேருந்து நிலையத்திற்கு மோகன் அழைத்துள்ளார் பின்னர் முகேஷ் என்பவர் கார் மூலம் இருவரையும் தேனி அருகே உள்ள ஜெயக்குமார் என்பவரின் பண்ணைக்கு அழைத்துச் சென்று இருவரையும் தென்னை மரத்தால் தாக்கியுள்ளனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இதில் கழுவாவை மட்டும் ஓடிவிடு இல்லை என்றால் உன்னை கொன்று விடுவேன் என மிரட்டி அனுப்பி வைத்து திலீப்பை மட்டும் அழைத்துச் சென்றுள்ளனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்த சம்பவம் குறித்து திலீப் தனது உறவினர்களுடன் தெரிவித்த நிலையில் திலீப்பின் உறவினர் நிர்மலா (47) தேனி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் தேனி போலீசார் வழக்கு பதிவு செய்து திலீப கொடுத்த தகவலின் அடிப்படையில் முகேஷ் என்பவரை கைது செய்து அவரிடம் விசாரணை நடத்திய நிலையில் மேலும் ஜெயக்குமார், முருகன், ஆகாஷ், முத்துப்பாண்டி, சதீஷ்குமார், சௌமியன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தினர்.

சாலையோர வியாபாரி கொலைவிசாரணையில் தேனி அன்னஞ்சி பகுதியைச் சேர்ந்த ஜெயக்குமார் (47)  என்பவரிடம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலி நகை விற்பனை செய்து இரண்டு லட்சம் பணம் மோசடி செய்யப்பட்டிருந்த நிலையில் இதே போல் ஜெயக்குமாரின் உறவினர் ஆண்டிபட்டியை சேர்ந்த மோகன் என்பவருக்கு திலிப் மற்றும் கலுவா தங்களிடம் போலி நகைகள் ஏமாற்றி விற்பனை செய்ய முயன்றதாகவும்.

இதனால் இருவரையும் அழைத்து சென்று அடித்து விசாரித்ததாகவும் இதில் திலிப் உயிரிழந்துவிட்டதால் கழுவாவை அனுப்பி வைத்து விட்டு திலீப்பின் உடலை மக்கள் அதிகம் பயன்பாடு இன்றி உள்ள தோட்டத்திற்கு எடுத்துச் சென்று சுமார் 10 அடி வரை மண் தோண்டி திலிப்பின் உடலை புதைத்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது.

சாலையோர வியாபாரி கொலைஇந்நிலையில் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட முருகனை அழைத்து வந்து திலீப்பின் உடல் புதைக்கப்பட்ட இடத்தினை அடையாளம் கண்ட போலீசார் பின் பெரியகுளம் தாசில்தார் மருது, தேனி உதவி காவல் கண்காணிப்பாளர் கேல்கர் சுப்ரமணிய பாலச்சந்தர்  முன்னிலையில் ஜேசிபி உதவியுடன் மண் தோண்டப்பட்டு  உடல் கண்டெடுக்கபட்டது.

தொடர்ந்து திலிப்பின் உடலை அவர்களது உறவினர்கள் அடையாளம் கண்டபின் மருத்துவர்கள் பிரதே பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவத்தில் இதுவரை 7 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இதில் தொடர்புடைய நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் .

 

—  ஜெய்ஸ்ரீராம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.