சிறுமிகளிடம் அத்துமீறல்! குற்றவாளிக்கு 3 ஆயுள் தண்டனை!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

10.12.2025 ஆம் தேதி கரூர் மாவட்டம் தொழற்பேட்டையில் பாதிக்கப்பட்ட 7 வயது சிறுமி வீட்டில் தனியாக இருந்த போது பக்கத்து வீட்டைச் சேர்ந்த பக்கீர் முகமது என்ற பக்ருதீன் சிறுமியின் வீட்டிற்குள் பெரியவர்கள் இல்லாத நேரத்தில் சென்று சிறுமியை பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். அந்த சிறுமி சத்தம் போடவே, சத்தம் கேட்டு 10 வயது, 12 வயது சிறுமிகள் ஆபத்தை உணராமல் பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்குள் காப்பாற்ற சென்ற இரண்டு சிறுமிகளையும் காமக் கொடூரன் பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் கரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டு புலன் விசாரணை செய்து எதிரி பக்ருதீன் மீது குற்ற இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

10.11.2026 ஆம் தேதி மேற்படி வழக்கின் எதிரி பக்கீர் முகமது என்ற பக்ருதீன் என்பவருக்கு மூன்று சிறுமிகளிடம் பாலியல் தாக்குதல் செய்த குற்றத்திற்காக u/s. 6 of POCSO Act-ன் படி ஆயுள் தண்டனை விதித்தும் (3 counts-3 ஆயுள் தண்டனை) மற்றும் u/s 329(3) BNS. ன்படி மூன்று மாத சிறை தண்டணையும் (3 counts 9 மாத சிறை தண்டணை விதித்தும்) U/S127(2) ன் படி 6 மாத சிறை தண்டணையும் 3 counts 18 மாத சிறை தண்டணை விதித்தும்) பாதிக்கப்பட்ட சிறுமிகளுக்கு தலா 5 லட்சம் விகிதம் அரசு நிவராண தொகை வழங்க வேண்டும் என மாண்பமை நீதிபதி திரு.தங்கவேல், அவர்களால் கரூர் மாவட்ட மகிளா நீதிமன்றம் அவர்களால் தீர்ப்பளிக்கப்பட்டது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

இவ்வழக்கில் சிறப்பாக புலன்விசாரணை செய்து வழக்கின் சாட்சிகளை நீதிமன்றத்தில் முறையாக ஆஜர்படுத்தி எதிரிக்கு சிறை தண்டனை பெற்று தந்த கரூர் அனைத்து மகளிர் காவல் நிலைய காவல் ஆய்வாளர் மற்றும் நீதிமன்ற பெண் காவலர் ஆகியோர்களை மத்திய மண்டல காவல்துறைத் தலைவர் V. பாலகிருஷ்ணன், அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள். மேலும் மத்திய மண்டலத்தில் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபடும் நபர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரித்துள்ளார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.