பள்ளி வாகனத்தில் மாணவிக்கு பாலியல் தொல்லை: 72வயது கிளீனர் போக்சோவில் கைது!
கோவில்பட்டியில் பள்ளி வேனில் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கிளீனரை போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி பங்களா தெரு, சிதம்பரம் காம்பவுண்டை சேர்ந்தவர் திருப்பதி (72). இவர் கோவில்பட்டியில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் பள்ளி வேனில் கிளீனராக வேலை பார்த்து வருகிறார். இந்த வேனில் பல்வேறு இடங்களில் இருந்து மாணவிகளை காலையில் ஏற்றி வந்து பள்ளிக்கூடத்தில் சேர்ப்பதும், மாலையில் மாணவிகளை ஏற்றி சென்று வீடுபகுதியில் இறக்கி விடுவதும் வாடிக்கை. இந்தவேனில் தினமும் ஏராளமான மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கு வந்து செல்கின்றனர்.

இந்தநிலையில், இந்த வேனில் பள்ளிக்கு வந்து செல்லும் 10 வயது மாணவி ஒருவருக்கு, கடந்த சில மாதங்களாகவே திருப்பதி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். வெளியே சொன்னால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டியதாக கூறப்படுகிறது இதுகுறித்து சிறுமி பெற்றோரிடம் தெரிவித்துள்ளார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதை தொடர்ந்து பெற்றோருடன் சென்று சிறுமி கோவில்பட்டி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இதுகுறித்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி நேற்று போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து திருப்பதியை கைது செய்தனர்.
— மணிபாரதி.