அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

பெண்ணுக்கு பாலியல் தொல்லை ! குற்றவாளிக்கு கடுங்காவல் தண்டனை !

திருச்சியில் அடகு நகையை விற்க

கரூர் மாவட்டம், கரூர் குளித்தலை உட்கோட்டம், சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய சரகத்திற்குட்பட்ட பால்மடைபட்டியில் பாலியல் தொந்தரவு செய்து மிரட்டிய குற்றத்திற்காக கடந்த 24.10.2024 ஆம் தேதி சிந்தாமணிப்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, எதிரி கேசவன், 23/26, /பெ குணசேகரன், பால்மடைபட்டி, கடவூர் வட்டம், கரூர் மாவட்டம் என்பவரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பப்பட்டார்.

கேசவன்
கேசவன்

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இவ்வழக்கானது விசாரணைக்கு கரூர் மகிளா நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டு இன்று 06.04.2026 ஆம் தேதி மேற்படி எதிரி கேசவன் என்பவருக்கு பாலியல் தொந்தரவு செய்த குற்றத்திற்காக 20 ஆண்டுகாலம் கடுங்காவல் தண்டனையும், கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்காக 2 ஆண்டுகால சிறை தண்டனையும் விதித்து ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டியும், மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு 5 லட்சம் நிவாரணம் வழங்க கோரி மான்பமை நீதிபதி. தங்கவேல், உத்திரவிட்டுள்ளார்.

மேற்கண்ட வழக்கில் தொடர்புடைய குற்றவாளியை துப்பாக்கி ஏந்திய போலீசார் வழிக்காவல் மூலம் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

இவ்வழக்கை சிறப்பாக, புலன்விசாரணை செய்த குளித்தலை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர், திருமதி.கலைவாணி, (தற்சமயம் கயர்லாபாத் காவல் நிலையம், அரியலூர் மாவட்டம்), சாட்சிகளை முறையாக ஆஜர் செய்த சிந்தாமணிப்பட்டி காவல் நிலைய நீதிமன்ற காவலர் ஆகியோர்களை கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் D.N. ஹரி கிரண் பிரசாத் IPS வெகுவாக பாராட்டினார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.