’லைக்கா’சுபாஸ்கரனை டென்ஷாக்கிய ஷங்கர் !
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட தெலுங்குப் படமான ‘கேம்சேஞ்சர்’ இந்த பொங்கலை முன்னிட்டு ஜனவரி-10-ஆம் தேதி ரிலீசானது. படம் ரிலீசாவதற்கு ஒருவாரத்திற்கு முன்பு, ‘தங்களின் ‘இந்தியன் -3’ஐ ரிலீஸ் பண்ணாமல், ‘கேம்சேஞ்சரை’ ரிலீஸ் பண்ணக் கூடாது’ என தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் பஞ்சாயத்தைக் கூட்டினார் லைக்கா சுபாஸ்கரன். இதனால் ரொம்பவே பதட்டமான ‘கேம்சேஞ்சர்’ தயாரிப்பாளர் ‘தில்’ ராஜூ திடுக்கிட்டுப்போனார்.
“ஏங்க இப்படி, என்னதாங்க நடக்குது, என்னோட படம் ரிலீஸ் நேரத்துல இப்படி பஞ்சாயத்தைக் கூட்றீகளே” என லைக்கா சுபாஸ்கரனிடமே பேசினார் ‘தில்’ ராஜூ. “மூணு வருசத்துக்கு முன்னால ஆரம்பிச்ச உங்க படத்தைப் பத்தி யோசிச்சு, இம்புட்டுப் பதறுறீகளே. அஞ்சு வருசத்துக்கு முன்னால ஆரம்பிச்ச ‘இந்தியன் -2’ வை இழுஇழுன்னு இழுத்து, இப்ப ‘இந்தியன் -3’ வரைக்கும் கொண்டு வந்து நிப்பாட்டிருக்காரு டைரக்டர் ஷங்கர்.
இப்ப என்னடான்னா… இன்னும் 20 நாட்கள் ஷூட்டிங் இருக்கு, அதுக்கு இன்னும் 65 கோடி ரூபாய் வேணும்னு பட்ஜெட்டை நீட்டுறாரு. ‘இந்தியன் -2’ வால நாங்கபட்டபாடு போதாதுன்னு இப்ப இந்தியன் -3’க்கு மேக்கொண்டு 65 கோடி ரூபாய் கேட்குறாரு. எங்க நிலைமைய கொஞ்சம் யோசித்துப்பார்த்தா உங்களுக்கே ரத்தக்கண்ணீர் வரும்” என ரத்தக்கண்ணீர் வடிக்காத குறையாக அழுதிருக்கிறார் சுபாஸ்கரன்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இருந்தாலும் தயாரிப்பாளர்கள் கவுன்சிலில் உள்ள பெரும்புள்ளிகள் கேட்டுக் கொண்டதால், பெரிய மனசு பண்ணி, ‘கேம்சேஞ்சர்’ ரிலீஸ் ஆவதற்கு துணை நின்றார் சுபாஸ்கரன்.
”ஷங்கர் கேட்ட 65 கோடி ரூபாயை ஷங்கரே ஃபைனான்ஸ் வாங்கி செலவு பண்ணட்டும். ‘இந்தியன் -3’ ரிலீசாகி லாபம் கிடைத்தால் அந்த 65 கோடிய நாங்க ஏத்துக்கிறோம்” என்பது சுபாஸ்கரனின் லேட்டஸ்ட் கண்டிஷன்.
ஸ்ஸ்ஸ்…..ஸப்பா இப்பவே கண்ணைக் கட்டுதே…
— மதுரை மாறன்.