நொறுங்கும் நரேந்திர மோடியின் பிம்பம்..??

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

நொறுங்கும் நரேந்திர மோடியின் பிம்பம்.

நரேந்திர மோடி இந்த ஆண்டு 2023 மே 26 அன்றுடன், இந்திய பிரதமராகப் பதவியேற்று 9 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் .

அங்குசம் இதழுக்கு தொடர்ந்து தோள் கொடுங்கள் !

இந்திய மண்ணில் ஏழை, எளிய மற்றும் நடுத்தர வாழ்வாதார சாதாரண மக்களின் மனங்களை நிறைவு செய்தாரா மோடி என்பதே நம் முன் நிற்கும் மில்லியன் டாலர் கேள்வி.

இதே 2014 மே மாதத்தில் பாராளுமன்ற தேர்தல் மக்கள் மன நிலை நேரடி கள ஆய்வில் நாம் நின்றிருந்தோம்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அருகே ஒரு தோட்டத்தில் மதுரை மல்லிகை பறித்துக்கொண்டிருந்த பெண் விவசாயக் கூலி நம்மிடம் கூறிய வார்த்தைகள் நமக்குள் இப்போதும் பசுமையாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கின்றது. “குஜராத்துல அந்த மோடி அய்யா ரொம்ப நல்லா ஆட்சிய நடத்துறார்னு எல்லாரும் பேசிக்கிறாங்க.

நம்ம தமிழ்நாட்டுல எம்பி எலக்சன்ல மோடி அய்யா கட்சி ஜெயிக்குமாங்கறது எனக்கு ஏதும் தெரியாதுங்க. ஆனாலும் இந்தியா பூரா மோடி அய்யா கட்சி ஜெயிச்சி வந்தால், இந்தியாவை அந்த மோடி நல்லாவே ஆட்சி பண்ணுவார்னு நான் நம்புறேங்க.” என்றார் அந்த பெண் விவசாயக் கூலி.


நமக்கு நம்ப முடியவில்லை. மோடி எங்கே இருக்கிறார்? இந்தப் பெண் எங்கே இருக்கிறார்? இவர்கள் இருவர்க்கும் இடையே தகவல் இணைப்புச் சங்கிலி எவ்விதம் உருவானது? இதனை ஆய்வு செய்தாலே, இந்தியா முழுவதுமாக நரேந்திர மோடி எனும் நவீனத்துவ பிம்பம் கட்டமைக்கப்பட்டது எவ்வாறு எனத் தெரிந்து விடும்.

பாரதிய ஜனதா கட்சி எனும் அரசியல் இயக்கத்துக்கு ஆதார சுருதியாகவும் ஆணி வேர்களாகவும் நிறைய அமைப்புகள் நிறைய குழுக்கள் பின்புலமாகவும் பக்க பலமாகவும் உயிர் நாடியாகவும் இயங்கி வருகின்றன.

ஆர்எஸ்எஸ், விஹெச்பி, பஜ்ரங்க்தள், இந்து சமய முன்னணி, சம்ஸ்கிருத சேவா பாரதி என மேலும் பல அமைப்புகள். யோசித்துப் பார்த்தால் இந்தியாவில் வேறு எந்தவொரு அரசியல் கட்சிக்கும் அதன் சார்புடைய இத்தனை அமைப்புகள் இத்தனை குழுக்கள் இருக்கின்றனவா என்பது மிகப் பெரும் ஐயம்தான்.

2014 நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே, இந்தியா முழுவதுமாக நரேந்திர மோடி எனும் பிம்பம் பற்பல பிம்பங்களாகக் கட்டமைக்கப்பட்டு ஆங்காங்கு உலவிடும் திருவிளையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன.

நரேந்திர மோடி மிகச் சிறந்த நிர்வாகி. துவண்டு கிடந்த குஜராத்தை தூக்கி நிறுத்தியவர் என்றெல்லாம் பரப்புரைகள் பதிவாகின.

இதில் பாரதிய ஜனதா கட்சி மற்றும் அதன் வெவ்வேறு இணை, துணை பிணை அமைப்புகள் எல்லாமே, அத்தனை அடர்த்தியாக அருந்தொண்டாற்றின.

இந்த செவி வழிச் செய்தி பரவலின் விளைவு தான், கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பாக திண்டுக்கல் நிலக்கோட்டையில் நம்மிடம் பேசிய கூலித் தொழிலாளி பெண் ஒருவரின் குரல். சரி.

“வாழ்ந்தா மோடி மாதிரி வாழணும்”

இந்த நிகழ்வு 9 ஆண்டுகளில் இந்திய மண்ணில் நரேந்திர மோடி எனும் நவீனத்துவ நவ நாகரீக பிம்பம் மேலும் மேலும் மெருகேற்றப்பட்டுள்ளதா??? அல்லது நொறுங்கிப் போய் விட்டனவா??? உலகமே அஞ்சி நடுங்கிய அந்தக் கொரோனா காலம் தவிர்த்து, இதர காலங்களில் இவரைப் போல அதாவது நரேந்திர மோடியைப் போல வெளிநாட்டுச் சுற்றுப் பயணங்கள் மேற்கொண்ட பிரதமர் எவரும் இல்லை.

சிறு வயதில் ரயில் நிலைய பிளாட்பாரத்தில் டீ விற்று தான் மிக எளிய ஜீவனம் நடத்தினேன் என்று தனது கடந்த காலத்தை நமக்கெல்லாம் அவ்வப்போது நினைவுபடுத்தும் நரேந்திர மோடி, பல லட்ச ரூபாய் மதிப்புடைய கோட் சூட் அணிந்து உலா வந்தது ஆடம்பரமா?? அல்லது எளிமையா??

தினசரி டீக்கடை பெஞ்ச்சில் அமர்ந்து நியூஸ் பேப்பர் படிக்கின்ற எளிய இந்தியனையும், “வாழ்ந்தா மோடி மாதிரி வாழணும்” என்று பேச வைத்த பிம்பம் அல்லவா அது?

இந்தியா என்பது மலைகளாலும் கடல்களாலும் சூழந்துள்ள தீபகற்ப நாடு. கடற்படை. விமானப் படை, தரைப் படை ஆகியன இந்தியாவின் வலிமைமிகு ராணுவப் படைகள் ஆகும்.

சுதந்திரம் பெற்றதில் இருந்து ராணுவத்தில் மேற்கண்ட மூன்று வகையான படைகளுக்கும் தனித்தனியே தளபதிகள் நியமிக்கப்பட்டு இயங்கி வந்துள்ளனர்.

யார் தார்மீகப் பொறுப்பு?

நரேந்திர மோடி தனது ஆட்சியில் மேற்கண்ட மூன்று வகையான படைகளுக்கும் சேர்த்து ஒரே ராணுவ தளபதியை நியமித்தார். சரி. அந்த ஒரே ராணுவ தளபதியை மட்டுமாவது நம்மால் பாதுகாக்க முடிந்ததா? இல்லையே.

அவர் தனது குடும்பத்தாருடன் ஏறியமர்ந்து பயணித்து வந்து தனி ராணுவ விமானம் ஊட்டி மலைப் பகுதியில் விபத்துக்கு உள்ளாகி இந்தியாவின் முப்படை ராணுவ தளபதி உட்பட குடும்பத்தார் அனைவரும் இறந்து போயினர். இதற்கு யார் தார்மீகப் பொறுப்பு ஏற்றிருக்க வேண்டும்?

இதே நிகழ்வு காங்கிரஸ் ஆட்சியில் நடந்திருந்தால், இதே பாஜக மிகப் பெரிய களேபரத்தை இந்தியாவில் உருவாக்கி இருக்கும். நமக்கு காங்கிரஸ் ஆட்சி அல்லது பாஜக ஆட்சி என்பது அல்ல. நடைபெற்றிருக்கும் நிகழ்வு தான் முக்கியம்.

பிபின் ராவத்
பிபின் ராவத்

முப்படை தளபதி ஒருவர் தனது குடும்பத்தாருடன் பயணித்து வந்த ராணுவ விமானம் விபத்தில் சிக்கி சிதைந்தது போலவே, நமது தேசத்தில் செயற்கையாகக் கட்டமைக்கப்பட்டிருந்த நரேந்திர மோடி எனும் பிம்பமும் நொறுங்கிப் போனது.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி 2016 நவம்பர் 8ம் தேதி இரவு எட்டேகால் மணிக்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தொலைகாட்சி ஊடகங்களில் நேரடியாகத் தோன்றுகிறார். ( இரு நாடுகளுக்கு இடையே யுத்தம், அல்லது உள்நாட்டில் அவசர நிலைப் பிரகடனம் போன்ற நேரங்களில், ஒரு நாட்டின் பிரதமர் முன் அறிவிப்பு ஏதுமின்றி தோன்றலாம்). அப்போது நரேந்திர மோடி அறிவிக்கிறார்.

வங்கி வாசலில் தவம் கிடந்த மக்கள்

“நாட்டில் கள்ளப் பணம் அதிகரித்து விட்டது. மேலும் அந்தக் கள்ளப் பணமானது தீவிரவாத செயல்களுக்கு பயன்படுத்தப்படுகிறது.

அதனால் இந்தியாவில் தற்போது புழக்கத்தில் இருந்து வருகின்ற ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகள் இன்று நள்ளிரவு முதல் செல்லாது. டிசம்பர் 30ம் தேதிக்குள் பொதுமக்கள் தங்கள் வசமிருக்கும் ஐந்நூறு, ஆயிரம் ரூபாய் நோட்டுகளை வங்கிகளில் செலுத்தி மாற்றிக் கொள்ளலாம்.” என்று தடாலடியாக அறிவிக்கிறார்.

சாதாரண மக்கள் உட்பட கோடீஸ்வரர்கள் தவிர ஏனையோர் தூக்கம் தொலைத்த நள்ளிரவு அது. வங்கிகளில் ஒரு நபருக்கு நான்காயிரம் ரூபாய் மட்டுமே பரிவர்த்தனையாக மாற்றித் தரப்படும் என்கிற அறிவிப்பு வேறு.

பணத்தை மாற்ற வங்கி வாசல்களில் தவம் கிடந்த பொதுமக்கள் வெயிலிலும் நீண்ட வரிசைகளில் நின்றிடக் குவியத் தொடங்கினர்.

அந்த நாளில் வீட்டில் கல்யாணம் வைத்துள்ளவர்கள், கல்யாணப் பத்திரிக்கை மற்றும் உள்ளூர் விஏஓ சான்றிதழ் கடிதம் காண்பித்து, 2 லட்ச ரூபாய் வரை பெற்றுக் கொள்ளலாம் என்கிற மாபெரும் சலுகை வேறு.

அந்த நாளில் தான் கர்நாடகாவில் பாஜக முக்கியப் பிரமுகர் வீட்டுத் திருமணம் சுமார் இருநூறு கோடி ரூபாய் செலவில் நடந்தேறியுள்ளது.

மேலும், பண மதிப்பிழப்பு நாட்களில் எந்த வங்கியிலும் எந்த ஊரிலும் மிகப் பிரபலமான ஒரு அரசியல்வாதியோ அல்லது தொழிலதிபரோ அல்லது பெரும் வணிகரோ வரிசையில் நின்று நான் உட்பட எவருமே பார்த்ததில்லை.

வெயிலில் கால் கடுக்க நின்று தங்களது சொந்தப் பணத்தை மாற்றிக்கொண்டவர்கள் பெரும்பாலும் மிகச் சாதாரண மக்கள்தான்.

நரேந்திர மோடி அணிந்திருந்த விலை மதிப்பற்ற மகுடமே, மதிப்பிழந்து மக்களின் மனங்களில் இருந்து இந்த மண்ணில் கழற்றி வீசப்பட்டது அப்போதுதான்.

இதுவா தேச பக்தி?

2019 மே மாதம் அடுத்த நாடாளுமன்றத் தேர்தல். 2019 பிப்ரவரி 14 அன்று காஸ்மீரின் புல்வாமா பகுதியில் தீவிரவாதிகளின் தாக்குதலில், இந்திய ராணுவ வீரர்கள் 40 பேர் உயிர்ப் பலி ஆகினர்.

மே மாதம் நடக்கவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலின் போது “தீவிரவாதத் தடுப்பு”க்கான கேடயமாக தேர்தல் பிரசாரத்தில் இதனைப் பயன்படுத்திக் கொண்டது பாஜக. இது போதாதா என்ன? முன்பை விட அதிக இடங்களில் வென்றது பாஜக.

2023 ஏப்ரல் மாதத்தில் 4 ஆண்டுகளுக்கு முன்பான மோடியின் மௌனமான நயவஞ்சகத்தினைத் தோலுரித்துக் காட்டினார் ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் முன்னாள் ஆளுநரான சத்யாபால் மாலிக். ஊடகங்களின் முன்னிலையில் அவர் பேசியது இது, “புல்மாவா தாக்குதலுக்கு முன்னராக ராணுவ வீரர்கள் கடந்து செல்ல விமானம் கேட்கப்பட்டிருந்தது.

ராணுவ டிரக் வண்டிகளில் ராணுவ வீரர்கள் ஏறிச் செல்லட்டும் எனப் பதில் தந்தார்கள். அவர்கள் சாலை வழியாகப் பயணித்தபோது தான், தீவிரவாதிகள் தாக்குதலில் ஒரே நேரத்தில் 40 இராணுவ வீரர்கள் உயிர்ப் பலி ஆகிப் போனார்கள்.

அதற்கு அடுத்து நான் பிரதமர் மோடியிடம், “அவர்கள் பயணிக்க விமானம் அனுப்பி இருந்தால், இந்த சாலை வழியிலானத் தாக்குதல் நடைபெற்றிருக்காது. 40 ராணுவ வீரர்களும் காப்பாற்றப் பட்டிருப்பார்கள்.” என்றேன்.

அதற்கு மோடி அவர்கள் இதனை நீங்கள் வெளியே சொல்லாதீர்கள் என்று கட்டளையிட்டார். அது சரி. சொந்த தேசத்தின் ராணுவ வீரர்களைப் பலியிட்டு, அதனைப் பிரச்சாரமாகி தேர்தலில் வெற்றி வாகை சூடுவது, எந்த வகையான தேச பக்தி? 40 ராணுவ வீரர்களின் ரத்தக் குன்றின் மீது ஏறி நின்று தான் வெற்றிப் பாடல் இசைப்பது?

மூன்று மடங்கு விலையுயர்ந்த கேஸ் சிலிண்டர்

கடைசியாக வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்க்கு நாம் வந்து விடுவோம். 2014 மார்ச் மாதம் வரை காங்கிரஸ் ஆட்சியில் 14.2 கி. எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் 410 மட்டும் தான். இந்த ஒன்பது ஆண்டுகளில் மட்டும் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை மூன்று மடங்காக உயர்ந்துள்ளது என்பது தான் நரேந்திர மோடி ஆட்சியானது ஏழை எளியவர்கள் உட்பட இந்தியக் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் வாரி வழங்கியுள்ள பம்பர் பரிசு ஆகும்.

2023 ஏப்ரல் மாதம் கேஸ் சிலிண்டர் டோர் டெலிவரி செய்ய வருபவரிடம் 1,200 ரூபாய் தந்தால், அவர் மீதம் பத்து ரூபாய் தருகிறார்.

ஆக, இன்றைய நிலைமைக்கு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலை ரூபாய் ஆயிரத்து இருநூறு. முன்னொரு காலத்தில் பாஜகவினரால் செயற்கையாக உருவாக்கப்பட்டு உலா வரச் செய்திருந்த நரேந்திர மோடியின் பிம்பமானது,

9 ஆண்டுகளுக்கு முன்பாக நம்மிடம் பேசிய, திண்டுக்கல் நிலக்கோட்டையில் மதுரை மல்லி பறித்துக் கொண்டிருந்த பெண் தொழிலாளியின் வீட்டு வாசல் உட்பட.

தற்போது ஒவ்வொரு மாதமும் இந்தியாவின் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் நொறுங்கிக் கொண்டே இருக்கின்றது.

-ஸ்ரீரங்கம் திருநாவுக்கரசு

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.