மோடியின் சூழ்ச்சி… ராகுலின் எழுச்சி…

0

2003 ம் ஆண்டு ராகுல்காந்தி அரசியலுக்கு வருவார் என்று ஊடகங்கள் ஆருடங்கள் கணித்தன. அதைப் பொய்யாக்கி 2004ம் ஆண்டு அரசியலுக்கு வருகிறேன் என்று அறிவித்துவிட்டு, 2004ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அமேதி தொகுதியில் போட்டியிட்டார். அந்தத் தேர்தலில் பாஜக வேட்பாளரை விட சுமார் ஒரு லட்சம் வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

2006ம் ஆண்டு வரை எந்தப் பிரச்னைகளிலும் கவனம் செலுத்தாமல் அமேதி தொகுதியின் வளர்ச்சியிலும், உ.பி.யில் கட்சி வளர்ச்சியிலும் அக்கறை காட்டினார். ஜனவரி 2006ல் காங்கிரஸ் சார்பில் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் நடந்த மாநாட்டில் ராகுல்காந்தி கட்சியில் முக்கியப் பொறுப்பேற்றுக் கட்சியை வழி நடத்திட வேண்டும் எனவும் ஆயிரக்கணக்கான கட்சி உறுப்பினர்களால் கேட்டுக்கொண்டனர். அதன் பின் பேசிய ராகுல்காந்தி “உங்களின் உணர்வுகளுக்கும், ஆதரவிற்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். நான் உங்களைக் கைவிட்டு விடப்போவதில்லை என்று உறுதி கூறுகின்றேன்”. ஆனால் உடனடியாக கட்சியின் உயர் பதவியை ஏற்றுக்கொள்ளுவதை மறுத்துவிட்டு அனைவரையும் அமைதிகாக்கும்படி கேட்டுக்கொண்டார். கட்சித் தொண்டர்கள் விரும்பியும் தலைவர் பதவியை ராகுல்காந்தி ஏற்காதது அவரது நிதானத்தை வெளிப்படுத்தியது.

https://businesstrichy.com/the-royal-mahal/

2007ல் உத்தரப்பிரதேச தேர்தல் பிரசாரத்தில் பேசிய ராகுல் “காந்தி-நேரு குடும்பத்தில் இருந்து யாரேனும் ஒருவர் அரசியலில் இருந் திருந்தால் பாபர் மசூதி இடிக்கப்பட்டிருக்காது” என்று கூறினார். இக்கருத்து 1992ல் பாபர் மசூதி இடிக்கப்பட்டபோது அப்போதைய பிரதமராக இருந்த நரசிம்மராவை தாக்கிப் பேசியதாகவே கருதப்பட்டது. ராகுலின் இந்தப் பேச்சு பாஜகவின் சில உறுப்பினர் களுடன் கடும் வாக்குவாதத்தை உண்டு பண்ணியது. சமாஜ்வாடி கட்சியும் இடதுசாரிகளும்கூட இவரது கருத்தை “இந்து-முஸ்லிம்களுக்கு எதிரானது” என்றனர். 2009ம் ஆண்டு நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட நபரை 3,33,000க்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மீண்டும் அமேதி தொகுதி யிலிருந்து தேர்ந்து எடுக்கப் பட்டார்.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி உத்தரப்பிரதேச மாநிலத்தில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 21 தொகுதிகளைக் கைப்பற்றியது. இந்த வெற்றிக்கு முழுமையான காரணம் ராகுல்காந்தியே என்று ஊடகங்கள் புகழாரம் சூட்டின. இவர் 6 வாரங்களில் 125 பிரச்சாரப் பொதுக்கூட்டங்களில் பங்கேற்றுப் பேசினார் என்பது வரலாற்று சிறப்பு வாய்ந்த செய்தியாகும். 2014ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வியை சந்தித்தது.

உ.பி.மாநிலத்தில் அமேதி தொகுதியிலிருந்து ராகுல்காந்தியும், ரேபரலி தொகுதியிலிருந்து அவரின் தாய் சோனியா காந்தியும் மட்டுமே வெற்றி பெற்றனர். 2013ம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக பொறுப்பேற்று பணியாற்றிய ராகுல்காந்தி 2017ம் ஆண்டு டிசம்பர் 16ம் நாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பினை ஏற்றார். 2019ல் நடந்த நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் போட்டியிட்ட அமேதியில் தோல்வி யடைந்தார். கேரளாவின் வயநாட்டில் வெற்றி பெற்றார். இதில் காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி என்ற தகுதியையும் இழந்தது. நாடாளுமன்ற தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பொறுப்பேற்றுக் காங்கிரசின் தலைவர் பதவியில் இருந்து தான் விலகுவதாக முறைப்படி அறிவித்தார்.

பாஜக ஆட்சி வந்தவுடன் ராகுல்காந்தியை இழிவுபடுத்தும் வகையில் “பப்பு” என்றே பொது மேடைகளிலும் நாடாளுமன்றத்தில் அழைத்து வந்தனர். ராகுல்காந்தி நாடாளுமன்றத்தில் முன்வைத்த எந்தக் கேள்விகளுக்கும் பாஜகவும், மோடியும் பதில் சொல்லாமல் இருந்தனர். மோடி, காங்கிரஸ் கட்சியையும், ராகுல்காந்தியையும் குறைசொல்லியே பேசிவந்தார். ராகுல் பதிலுக்கு எப்போதும் மோடியை இழிவுபடுத்திப் பேசியது இல்லை என்பதில் ராகுலின் அரசியல் நாகரிகம் வெளிப்பட்டது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, அகில இந்திய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடையச் செய்யவும் ‘பாரத் ஜோடோ யாத்ரா’ என்ற இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை 2022ம் ஆண்டு செப்டம்பர் 7ம் நாள் குமரி முதல் காஷ்மீர் வரை இந்த நடைப்பயணத்தைக் கன்னியாகுமரியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மொத்தம் 150 நாட்களில் 12 மாநிலங்கள் வழியாக 3,500 கி.மீ. தொலைவுக்கு இந்த நடைப்பயணம் நடைபெற்றது.


கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்ட இந்த நடைப்பயணம், கேரளா, கர்நாடகா, தெலங்கானா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம், ஹரியானா, டெல்லி, பஞ்சாப் வழியாகக் காஷ்மீரைச் சென்றடைந்து நிறைவு பெற்றது. இந்தப் பயணத்தின் மூலம் ராகுல் 1 கோடி மக்களை நேரடியாக சந்தித்தார். நடைப்பயணத்தை தொடக்கத்தில் அதிகம் கவனம் கொள்ளாத பாஜக பயணம் நிறைவுடையும் நேரத்தில் ஆடிப்போய்விட்டது என்றே சொல்லலாம். ராகுலின் இந்த வளர்ச்சியைத் தடுக்கவும் நாடாளுமன்றத்திலிருந்து ராகுலை வெளியேற்றவும் பாஜக பல வழிகளைக் கையாண்டது. அதில் ஒன்றுதான் 2019 நாடாளுமன்ற தேர்தலில் கர்நாடக மாநிலம் கோலாரில் மோடி என்பவர்கள் திருடர்கள் என்று இழிவுபடுத்திப் பேசினார் என்று அவமதிப்பு வழக்கை இந்தியாவில் முதல்முறையாகக் குற்றவியல் வழக்காகப் பதிவு செய்யப்பட்டது.

அந்த வழக்கில் ராகுலுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து அவர் எம்பி பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து, ராகுலுக்கு வழங்கப்பட்ட வீட்டைக் காலி செய்யவேண்டும் என்ற அரசின் உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் கடந்த வாரத்தில் அரசு வழங்கிய வீட்டையும் காலி செய்தார் என்ற செய்தியறிந்து கோடிக்கணக்கான மக்கள் ராகுலின் மீது அனுதாபம் கொண்டனர். பாஜக அரசு நீதிமன்றங்களின் மூலமாகவும் ராகுலுக்குக் குடைச்சல் கொடுத்துக்கொண்டிருக்கின்றது. ராகுல் மீது பல்வேறு அவதூறு வழக்குகள் பாஜக ஆளும் மாநிலங்களில் தொடுக்கப்பட்டுள்ளன.

பாஜக கட்சி ராகுல்காந்தியைத் தொடர்ந்து அடித்துக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு ஓர் இயல்பியல் விதி தெரியவில்லை. அடிக்க அடிக்க பந்து எழும்புமே தவிர அது அடங்கிவிடாது என்ற விதியின்படி ராகுல்காந்தியின் வளர்ச்சி பெற்று வருகிறார் என்பதையே உணர முடிகின்றது. இது மோடியின் ஆட்சியை வீழ்த்துமா? என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

ராகுல்காந்தி மீதான இந்த நடவடிக்கைகள் குறித்து நாடு முழுவதும் காங்கிரசார் பல்வேறு வகையான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்நிலை யில், ஏப்ரல் 15-ம் தேதி திருச்சியில் காங்கிரசார் ரயில் மறியல் போராட்டம் நடத்தி கைதாகினர். அதில், பங்கேற்று கைதான நிலையில் மாநில பொதுக்குழு உறுப்பினரும் திருச்சி சிட்டி கார்ப்பரேஷன் கவுன்சிலருமான லி.ரெக்ஸிடம் தொடர்பு கொண்டு சில கேள்விகளை முன்வைத்தோம்.

L. ரெக்ஸ்
L. ரெக்ஸ்

இந்த போராட்டங்கள் எதற்காக?

தலைவர் ராகுல் காந்தி, உண்மையின் அடையாளம் என்பது மக்களுக்கு தெரியும். மோடியின் பாசிச ஆட்சியினை காட்டுவதற்கான ஒரு வாய்ப்பாக பயன்படுத்தி மோடியின் மக்கள் விரோத போக்கினை மக்களுக்கு எடுத்து காட்டத்தான் இந்த போராட்டங்கள்.

தமிழகத்தில் காங்கிரஸின் செயல்பாடுகள்?

தமிழக காங்கிரஸ் கட்சி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. தோழமை கட்சியான திமுக முழு ஒத்துழைப்பு தருகிறது. தற்போது நடைபெற்று வரும் பல்வேறு வகையான போராட்டங்கள் மூலம் கட்சி புதுஎழுச்சியை பெற்றுள்ளது. இன்று நடைபெற்ற ரயில் மறியலில் காங்கிரஸ் கட்சியினர் மட்டுமின்றி 100க்கும் மேற்பட்ட பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தமிழக BJP தலைவர் அண்ணாமலை செயல்பாடுகள் குறித்து?

அண்ணாமலை பொய் யின் மறு உருவம். தகவல் தொழில்நுட்பத்தை மட்டும் வைத்து கொண்டு கட்சியை வளர்க்கலாம் என்று நினைக்கிறார். அது பகல் கனவு பலிக்காது. தமிழகத்தில் பாராதிய ஜனதா கட்சி என்நாளும் மக்கள் மனதை வெல்ல முடியாது.

கவுன்சிலராக தங்கள் பங்களிப்பு, விறி ஒத்துழைப்பு குறித்து?

எனது வார்டு மக்களின் குறைகளை களைய வாட்ஸ்அப் குரூப் மூலம் கண்காணித்து உடனடியாக தீர்த்து வைக்கிறேன். கடந்த ஓராண்டில் பிரதான தார்சாலைகள், ஆரம்ப சுகாதார மையம், எம்.பி தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து உயர்கோபுர மின்விளக்கு, மின் மோட்டாருடன் கூடிய போர்வெல் போன்ற பணிகள், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சீரணி அரங்கம், போர்வெல், அங்கன்வாடி மையங்கள் என ரூ. 6 கோடியே 22 லட்சம் மதிப்பில் பணிகள் என மக்கள் மனநிறைவு அடையும் வகையில் செய்துள்ளேன். மேலும் பாலாஜி நகர் நியூ டவுன் இணைப்பு பாலத்திற்கு ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. எம்பி திருநாவுக்கரசர், அமைச்சர்கள் நேரு, மகேஷ், மேயர் அன்பழகன், கோட்டத்தலைவர் மதியழகன் ஆகியோர் எனது வார்டுக்கு கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர்.

வரும் பாராளுமன்ற தேர்தல் முடிவு குறித்து தங்கள் கருத்து?

பிரதமர் மோடிக்கு ஆதரவு இருப்பது போல தோன்றுகிறது, ஆனால் நாடு முழுவதும் மோடி எதிர்ப்பு அலை உருவாகி கொண்டே வருகிறது. அது, விரைவில் தீவிரமடையும். மோடி அரசின் மக்கள் விரோத செயல்பாடுகள் பாரதிய ஜனதா கட்சியை வரும் தேர்தலில் வீழ்த்தும் என்று
தெரிவித்தார்.

-ஆதவன்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.