அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திராவிட வரலாற்றில் ஒளிரும் இரத்தினம் !

திருச்சியில் அடகு நகையை விற்க

ஒலிம்பிக் சுடரை ஏந்தி ஓடுபவர் குறிப்பிட்ட தூரம் கடந்ததும் அடுத்தவரின் கையில் அந்தச் சுடரை ஒப்படைப்பது போலத்தான் திராவிட இயக்கத்தின் பயணமும்.

“தி.மு.கழகத்தின் முதல் அத்தியாயத்தை நான் எழுதியிருக்கிறேன். அடுத்த அத்தியாயத்தை தம்பி கருணாநிதி எழுதுவார்” என்றார் பேரறிஞர் அண்ணா. கலைஞர் தன்னுடைய 45 வயதிலிருந்து 95 வயது வரை அரை நூற்றாண்டு காலம் கழகத்தின் வரலாற்றைத் தன் தலைமையில் எழுதினார். கழகப் பணிகளைத் தன் உடன்பிறப்புகளிடம் பிரித்துக் கொடுத்தார்.

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

தி.மு.க. நடத்தும் மாநாடுகளில் ஊர்வலம் எந்தளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தததோ, அது போலவே திராவிட இயக்க வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். 1990ஆம் ஆண்டு திருச்சியில் நடந்த தி.மு.க. மாநில மாநாட்டில், வரலாற்றுக் கண்காட்சியை அமைக்கும் பொறுப்பை அன்றைய இளைஞரணி செயலாளரான இன்றைய கழகத் தலைவர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடம் அளித்தார் கலைஞர். தி.மு.கவின் அண்ணாவுக்குப் பிறகு கலைஞர் எழுதிக்கொண்டிருந்த அத்தியாயத்தையும் உள்ளடக்கிய புகைப்படக் கண்காட்சி அது.

இரத்தினகிரி
இரத்தினகிரி

Celebrating Thangamayil’s 34th Anniversary | Dec 25th to Jan 1st | Thangamayil Jewellery Limited

‘ஊர்வலம்’ என்ற வார்த்தையை தன் தலைமையிலான இளைஞரணியின் நேர்த்தியான அணிவகுப்பினால் ‘பேரணி’ என்று மாற்றிய பெருமை இளைஞரணிச் செயலாளராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு உண்டு. கலைஞர் தன்னிடம் ஒப்படைத்த வரலாற்றுப் புகைப்படக் கண்காட்சியையும் அதுபோல பெயர் பெறச் செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்பட்டார். அவரது எண்ணத்தை நிறைவேற்றும் வகையில் ஒத்துழைப்பு தந்த பலரில், இருவர் முக்கியமானவர்கள். ஒருவர், தஞ்சை இரா.இரத்தினகிரி. மற்றொருவர், கோவை(பொள்ளாச்சி) மா.உமாபதி.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

திருச்சி மாநாட்டின் வரலாற்றுக் கண்காட்சியைக் கலைஞருடன், பேராசிரியர் அன்பழகனார், முரசொலி மாறன் உள்ளிட்ட கழக முன்னோடிகளும் பார்வையிட்டனர். “மாநாடு நடக்கும்போது மட்டும் அமைக்கப்படும் வரலாற்றுக் கண்காட்சியை ஏன் நிரந்தரமாக அமைக்கக்கூடாது?” என்ற எண்ணம் கலைஞருக்கும் கழக முன்னோடிகளுக்கும் உருவாகக்கூடிய அளவுக்கு திருச்சி மாநாட்டின் வரலாற்றுக் கண்காட்சி அமைந்திருந்தது.

நிரந்தரமான கண்காட்சி குறித்த சிந்தனை வளர்ந்தது. அதற்கானப் பொறுப்பும் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களிடமே ஒப்படைக்கப்பட்டது. அவர் தன்னுடைய வலதுபுறம் ஒருவரும், இடதுபுறம் ஒருவருமாக இருவரைக் கொண்டு கழகத்தின் தலைமை நிலையமான அண்ணா அறிவாலயத்தில் அதனை உருவாக்கினார். திருச்சி மாநாட்டில் துணை நின்ற அதே தஞ்சை இரத்தினகிரியும் பொள்ளாச்சி உமாபதியும்தான் அந்த இருவர்.

கலைஞர் கருவூலம் என்ற பெயரில் ஒரு நூற்றாண்டு கால அரசியல்-சமுதாய-பொருளாதார-பண்பாட்டு வரலாற்றைச் சொல்லும் நிரந்தரக் கண்காட்சியகத்தை இந்திய குடியரசுத் தலைவராக இருந்த கே.ஆர்.நாராயணன் 2003 செப்டம்பர் 3ஆம் நாள் திறந்து வைத்தார். அதற்கான கல்வெட்டில் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களின் பெயருடன் இரத்தினகிரி, உமாபதி ஆகியோரின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது.

திராவிட இயக்கம் என்ன செய்தது என்று கேட்கிறவர்களும், திராவிட இயக்கம் என்னென்ன செய்தது என்று ஆய்வு செய்கிறவர்களும், ஒரு நூற்றாண்டு கடந்த வரலாற்றை எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அமைந்துள்ளது கலைஞர் கருவூலம்.  அந்த வரலாற்றுக் காட்சியகத்திற்கு மாணவரணித் தோழர்களை தொடர்ந்து அழைத்து வரும் பணியை தம்பி அமுதரசன் முன்னெடுத்துள்ளார். இளைஞரணி சார்பிலும் மற்ற அணிகள் சார்பிலும் உடன்பிறப்புகள் வருகை தருவதுடன், கட்சிக்கு அப்பாற்பட்ட மாணவர்களும் இளைஞர்களும் வருகிறார்கள். திராவிட இயக்கத்தின் சாதனைகளை அறிந்து கொள்ளும் ஆவலுடன் பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் வருகை தந்து அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் கருவூலத்தையும் பேராசியர் அன்பழகன் ஆய்வு நூலகத்தையும் பார்வையிட்டு வரலாற்றுத் தரவுகளை சேகரித்துக் கொள்கிறார்கள்.

அண்ணா அறிவாலயத்தில் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள திராவிட இயக்க வரலாறு-காட்சியகத்தின் உருவாக்கத்தில் துணை நின்றவர்களின் ஒருவரான தஞ்சை இரா.இரத்தினகிரி இன்று இல்லை. நேற்றுடன் தன் பணியை அவர் நிரந்தரமாக நிறுத்திக்கொண்டார்.

பெரியார் வழியில் பகுத்தறிவு சிந்தனையுடன் கண்காட்சி, புத்தகத் தொகுப்பு, கருத்தரங்கு உள்ளிட்ட பல்வேறு ஆக்கப் பணிகளை சிறப்பாக செய்துள்ள  ஐயா இரத்தினகிரி திராவிட இயக்க வரலாற்றில் கல்வெட்டாக நிலைத்திருப்பார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.