ஓடிடி- யிலும் போட்டா போட்டி! ஷார்ட் ஃப்ளிக்ஸின் ‘பானிபூரி!’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ஓடிடி-யிலும் போட்டா போட்டி! ஷார்ட் ஃப்ளிக்ஸின் ‘பானிபூரி!’

கோலிவுட்டில் தயாராகும் சினிமாக்களின் ரிலீஸ் ரைட்சை வாங்குவதற்கு சில கம்பெனிகளிடையே போட்டி நடக்கும். மெகா பட்ஜெட், மெகா நடிகர்களின் படங்கள் என்றால் ”நீயா? நானா? விட்டேனா பார்” என்ற மல்லுக்கட்டே  நடக்கும். இதே போட்டி தான் ஓடிடி தளங்களிலும் இப்போது ஆரம்பமாகியுள்ளது. அமேசான், டிஸ்னி ஹாட்ஸ்டார் போன்ற கார்ப்பரேட் ஓடிடி தளங்கள் உலக அளவில் கிளைகள் பரப்பி பல மொழி சினிமாக்களிலும் ராஜ்யம் நடத்தி வருகின்றன. இதற்கடுத்து இந்திய சினிமாவின் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய ஐந்து மொழிகளைக் குறிவைத்து ஜி-5, நெட்ஃப்ளிக்ஸ், ஆஹா ஒரிஜினல் போன்ற ஓடிடி தளங்கள் களம் இறங்கியுள்ளன.

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

அந்த வரிசையில் நெட்ஃப்ளிக்ஸ்க்கு  போட்டியாக களம் இறங்கியுள்ளது ஷார்ட்ஃப்ளிக்ஸ். இந்த ஓடிடியின் லேட்டஸ்ட் ரிலீஸ் தான் ‘பானிபூரி’ வெப் சீரிஸ்.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

தயாரிப்பு: ஃபுல் ஹவுஸ் எண்டெர்டெய்ன்மெண்ட். டைரக்‌ஷன்: பாலாஜி வேணுகோபல். நடிகர்—நடிகைகள்: லிங்கா, சாம்பிகா, இளங்கோ குமரவேல், கனிகா, வினோத் சாகர், ஸ்ரீகிருஷ்ண தயாள், கோபால். ஒளிப்பதிவு: பிரவீன்பாலு, இசை: நவ்னீத் சுந்தர், எடிட்டிங்: பி.கே. எக்ஸ்கியூட்டிவ் தயாரிப்பாளர்: செல்லதுரை. பி.ஆர்.ஓ. சுரேஷ் சந்திரா& ரேகா டி ஒன்.

மெகா சிட்டிகளில் மாலை நேரங்களில் இளைஞர்களும் இளைஞிகளும் அதிகம் விரும்பி, ஒருவருக்கொருவர் ஊட்டி மகிழும் ஒரு சாட் ஐட்டம் தான் பானிபூரி. ( இப்ப டவுன் பஞ்சாயத்து ரேஞ்சிலும் பானிபூரி எண்ட்ரியாகிவிட்டது). மொத்தம் எட்டு எபிசோடுகள் கொண்ட இந்த ‘பானிபூரி’ வெப்சீரிஸின் கதை மொத்தமும் கோவை, திருப்பூர், சென்னை போன்ற மெகா சிட்டிகளில் தான் நடக்கிறது.

லிங்காவுக்கு பெண் பார்க்கிறார்கள் அவரது அண்ணன் கிருஷ்ண தயாளும் அண்ணி கனிகாவும். ஆனால் லிங்காவுக்கோ தனது லவ்வர் சாம்பிகாவை கல்யாணம் பண்ண வேண்டும் என்பது ஆசை. இதனால் அண்ணி பார்த்த பெண்ணைத் தட்டிக் கழிப்பதற்காக மும்பையில் வேலை என்று சொல்லி சென்னைக்கு வண்டியேறி, அங்கே ஐடி கம்பெனியில் வேலை பார்க்கும் கேர்ஸ்ஃப்ரண்ட் சாம்பிகாவுடன் காஸ்ட்லியான அடுக்குமாடிக் குடியிருப்பில், கல்யாணமே செய்து கொள்ளாமல் லிவிங் டுகெதர் ஸ்டைலில் இருக்கிறார். ”ஏழு வருசமா காதலிச்ச ரெண்டு பேரும் ஏழு நாள் ஒண்ணா இருப்போம். இந்த ஏழு நாள்ல எல்லா விசயத்துலயும் நமக்குள்ள ஒத்துப் போச்சுன்னா கல்யாணம் பண்ணிப்போம்” என்பது தான் லிங்காவுக்கும் சாம்பிகாவுக்கும் இடையிலான வித் அவுட் டாக்குமெண்ட்  காண்ட்ராக்ட். இந்த ‘காண்ட்ராக்ட் லவ்’ கரெக்டாகுதா? வேஸ்டாகுதா? என்பதற்கு எட்டாவது எபிசோடில் விடை சொல்கிறார் டைரக்டர் பாலாஜி வேணுகோபால்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

வெப் சீரிஸுக்கென்றே கச்சிதமாக தயாராகி வரும் லிங்கா, இதிலும் செம ஃபிட்டாகத்தான் இருக்கிறார். இவரின் கேர்ள்ஃப்ரண்ட் சாம்பிகாவோ முக அமைப்பு, பாடி ஷேப் இவற்றில் ‘அடேங்கப்பா….’ என வாய் பிளக்க வைக்கிறார். அதே போல் நடிப்பும் நன்றாகத் தான் வந்திருக்குன்றதையும் சொல்லணும் இல்லயா?

லிங்காவின் அண்ணியாக வரும் கனிகா, நண்பனாக வரும் வினோத்சாகர், சாம்பிகாவின் அப்பாவாக வரும் இளங்கோ குமரவேல் என எல்லோருமே பானிபூரி டேஸ்டாக இருக்க ஒத்துழைத்திருக்கிறார்கள். அதே போல் வெப்சீரிஸுக்கு என்ன தேவையோ, எப்படி தேவையோ, அப்படிக் கொடுத்திருக்கிறார்கள் இசையமைப்பாளர் நவ்னீத் சுந்தரும் ஒளிப்பதிவாளர் பிரவீன் பாலுவும்.

வெப்சீரிஸ்களுக்கு சென்சார் கெடுபிடிகள் எதுவுமே இல்லாததால், ஆபாசம், வன்முறைக் காட்சிகள், ஏடாகூட வசனங்களையெல்லாம் தாறுமாறாக வைத்து, ஆண்களும் பெண்களும் தனித்தனியாகத் தான் பார்த்தாக வேண்டியளவுக்கு எடுக்கிறார்கள், எடுப்பார்கள். ஆனால் இந்த ‘பானிபூரி’யிலோ, கசமுசா சீன்கள் வைப்பதற்கு ரொம்பவே வாய்ப்பு இருந்தும், துளிகூட விரசமில்லாமல் எடுத்த வகையில் டைரக்டர் பாலாஜி வேணுகோபாலைப் பாராட்டலாம். ஆனா அதுக்கெல்லாம் சேர்த்து வச்சு எட்டு எபிசோடிலும் எல்லோரும் பேசுகிறார்கள், பேசுகிறார்கள், பேசிக்கொண்டே இருக்கிறார்கள்.

இருந்தாலும் இந்த ‘பானிபூரி’ ஓகே ஓகே ரகம் தான்.

–மதுரைமாறன் 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.