திருச்சியில் சிறப்பு குறுங்காடு மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்
திருச்சிராப்பள்ளி மாநகராட்சி மற்றும் சாரதாஸ் நிறுவனம் இணைந்து மாநகராட்சி மண்டலம் 5,வார்டு எண்8 கணபதி நகர் மற்றும் வின்ஸ் அன்பு அவன்யூ ஆகிய இரண்டு பகுதியில் உள்ள 2506 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் 7500 மரக்கன்று நடும் சிறப்பு குறுங்காடு திட்டத்தை மாநகராட்சி ஆணையர் நே.பொன்மணி இ.ஆ.ப., (29.10.2026) தொடங்கி வைத்தார்கள்.
மாநகராட்சிக்கு சொந்தமான கணபதி நகரில் 1450 , வின்ஸ் அன்பு அவன்யூவில் 1150 ஆகிய இரண்டு மொத்தம் 2506 பூங்கவில் சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட இப்பூங்காவில் சிறப்பு குறுங்காடு மரக்கன்று நடும் திட்டம் திருச்சி சாரதாஸ் நிறுவனம் (CSR) திட்டத்தின் கீழ் மொத்தம் 7500 மரக்கன்றுகள் வழங்கினார்கள் . இதில் 26 வகையான நிழல்தரும் மரங்கள், பூக்கும் மரங்கள், பழம்தரும் மரங்கள் மற்றும் சுற்றுச் சூழலுக்கு உகந்த முறையில் நடவு செய்யப்பட உள்ளன. நடவு செய்யப்பட்ட அனைத்து மரக்கன்றுகளுக்கும் செட்டு நீர் பாசன வசதி, பாதுகாப்பு வேலி, மற்றும் முறையான பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
மாநகராட்சி பகுதியில் அடர்வன குறுங்காடு திட்டம் இதுவரை திருவானைக்கோவில், ஸ்ரீரங்கம், அரியமங்கலம் அகிலாண்டேஸ்வரி நகர், சஞ்சீவி நகர், வின்ஸ் அவன்யூ, கணபதி நகர், கருமண்டபம் காவிரி நகர் உள்ளிட்ட 9 இடங்களில் அடர்வன குறுங்காடு திட்டம் நடவு செய்யப்பட்டுள்ளது .
இந்நிகழ்வில் உதவி ஆணையர் செல்வி.நித்தியா, நன்கொடையாளர் சாரதாஸ் ரோஷன் மணவாளன் மற்றும் முன்னாள் உதவி. ஆணையர் வைத்தியநாதன், மாமன்ற உறுப்பினர், மாநகராட்சி அலுவலர்கள், பணியாளர்கள் கலந்து கொண்டார்கள் .





Comments are closed, but trackbacks and pingbacks are open.