ஸ்ருதிஹாசனின் ஃபர்ஸ்ட் ஹாலிவுட் சினிமாவின் ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸ்!
இசைக்கலைஞர், பாடகி, பாடலாசிரியர், திறமை மிக்க நடிகை என பன்முகம் கொண்டவர் ஸ்ருதி ஹாசன். இவர் இப்போது
ஹாலிவுட் இயக்குநர் டாப்னே ஷ்மோன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘தி ஐ ‘ ( The Eye) படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமாகி விட்டார். இப்படத்தில் மார்க் ரௌலி, லிண்டா மார்லோவ், பெரு கவாலியேரி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஜேம்ஸ் செக்வின் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு டேவிட் ஸ்விட்சர் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தில் ஸ்ருதிஹாசன் டயானா எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இவருடைய பிறந்த நாளை ( ஜனவரி 28)முன்னிட்டு படத்தின் இயக்குநரான டாட்னே ஷ்மோன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் ஸ்ருதிஹாசனின் கதாபாத்திர தோற்றத்தை வெளியிட்டு, ‘அற்புதமான மற்றும் துணிச்சல் மிக்க ஸ்ருதிஹாசனுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
அவர் எப்போதும் எங்களின் ‘டயானா’வாக இருப்பார். லண்டன், கிரீஸ், அமெரிக்கா மற்றும் இந்தியாவை சார்ந்த ‘தி ஐ’ படக் குழுவினர் இந்த பிரத்யேக நாளில் உங்களை போற்றுகிறோம். கொண்டாடுகிறோம்” என பகிர்ந்துள்ளார். ஸ்ருதிஹாசனும், ‘நன்றி என் அன்பானவர்களே ‘ என பதிவிட்டு, தன் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சைக்காலஜிக்கல் த்ரில்லர் ஜானரிலான இந்தப்படம் கிரேக்க நாட்டில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவிலும் மற்றும் லண்டனில் நடைபெற்ற சுயாதீன படைப்புகளுக்கான திரைப்பட விழாவிலும் கலந்து கொண்டு அனைவரது பாராட்டையும் பெற்றிருக்கிறது.
— மதுரை மாறன்.