சில்லறை பிரச்சினைகளில் சிக்கி ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் உடன்பிறப்புக்கள்!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

 

சில்லறை பிரச்சினைகளில் சிக்கி ஸ்டாலினுக்கு நெருக்கடி ஏற்படுத்தும் உடன்பிறப்புக்கள்!

அஸ்வீன் சுவீட்ஸ் ஆர்டர் செய்ய..

திமுக-வுக்கு இது போதாத காலம் போல. ஆளுநரையும் அமலாக்கத் துறையையும் வைத்துக்கொண்டு ஆளும் பாஜக கொடுக்கும் குடைச்சல்கள் போதாதென்று, ஆன்லைன் தொடங்கி ஆஃப்லைன் வரையில் கழக உடன்பிறப்புகள் சிலர் வாய்க்கொழுப்பெடுத்து பேசியும், அடாவடியில் ஈடுபட்டும் பிரச்சினையில் சிக்கி வருகிறார்கள்.

பொதுக்கூட்டமொன்றில், நடிகையும் பாஜகவைச் சேர்ந்தவருமான குஷ்பு பற்றி வரம்புமீறிய பேச்சுக்காக கைது செய்யப்பட்டார், திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி.

அங்குசம் சேனல் வீடியோ பார்க்க...

சிவாஜி கிருஷ்ணமூர்த்தி - குஷ்பு
சிவாஜி கிருஷ்ணமூர்த்தி – குஷ்பு

திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவின் ஆதரவாளர் களுக்கும், எம்.பி. சிவா ஆதரவாளர்களுக்கும் இடையே நடைபெற்ற ஏற்பட்ட மோதலையடுத்து, தலைமை செயற்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், மாவட்ட துணைச் செயலாளர் முத்துச்செல்வம், மாவட்ட பொருளாளர் துரைராஜ், 55-வது வட்ட செயலாளர் ராமதாஸ் ஆகியோரை தற்காலிகமாக நீக்கம் செய்து நடவடிக்கை மேற்கொண்டது, திமுக தலைமை.

காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ்
காஜாமலை விஜய், முத்துச்செல்வம், ராமதாஸ்
துரைராஜ், திருப்பதி
துரைராஜ், திருப்பதி

சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரனுக்கு எதிராக செயல் பட்ட, சேலம் மாநகராட்சியின் எதிர்க்கட்சித் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான எதிர்க்கட்சித் தலைவருமான ஜெயக்குமார் மற்றும் 18 வது கோட்ட மாமன்ற உறுப்பினர் சர்க்கரை சரவணண் ஆகியோரை இடைநீக்கம் செய்திருக்கிறது, திமுக தலைமை.

ஜெயக்குமார் - சர்க்கரை சரவணண்
ஜெயக்குமார் – சர்க்கரை சரவணண்

கல்லக்குடி நகர திமுக செயலரும், கல்லக்குடி பேரூராட்சி தலைவருமான பால்துரை. கல்லக்குடியில் இயங்கிவரும் டால்மியா சிமெண்ட் ஆலை அலுவலகத்திற்குள் தனது ஆதரவாளர்களுடன் புகுந்து ரகளையில் ஈடுபட்டிருக்கிறார். சிசிடிவி காட்சிப்பதிவுகளோடு கல்லக்குடி போலீசு நிலையத்தில் புகார் கொடுத்திருக்கிறது, டால்மியா சிமெண்ட் ஆலை தரப்பு.

பால்துரை
பால்துரை

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இப்புகாரையடுத்து, பால்துரை, சீனிவாசன், ரமேஷ் ஆகிய மூவர் மீது கல்லக்குடி போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கலைஞருக்கு நூற்றாண்டு விழா எடுத்திட்டுருக்க நேரம் பார்த்து, கல்லக்குடியில் இந்தக்கூத்தா? என சலித்துக்கொள்கிறார்கள் லோக்கல் உடன்பிறப்புக்கள்.

பழைய வாகனம் ஏலம் எடுப்பது தொடர்பான பிரச்சினையில், உப்பிலியபுரம் திமுக ஒன்றிய செயலாளர் முத்துசெல்வம் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக திருச்சி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகாரளித்திருக்கிறார், உப்பிலியபுரத்தைச் சேர்ந்த நடராஜன். இவரது புகாரைத் தொடர்ந்து, ஆற்று மணலை சட்டவிரோதமாக அள்ளியது தொடர்பான விவகாரத்தில் தேவையில்லாமல் தன்னை சம்மந்தப்படுத்தி, முத்துச்செல்வம் தனக்கும் கொலைமிரட்டல் விடுத்துவருகிறார் என ரெங்கநாதன் என்பவரும் புகார் கொடுத்திருக்கிறார். ”சின்ன வாக்குவாதம் நடந்தது உண்மை. கொலைமிரட்டல் எல்லாம் விடலை.” என மறுக்கிறார், முத்துசெல்வம்.

முத்துசெல்வம் - நடராஜன்
முத்துசெல்வம் – நடராஜன்

திருச்சி தெற்கு மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் மற்றும் திருவெறும்பூர் ஒன்றியக் குழு உறுப்பினர் பாலமுருகன், குண்டூரைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு கிராம நிர்வாக உதவியாளர் வேலையை வாங்கிக் கொடுத்ததற்காக, மூன்று இலட்சம் இலஞ்சம் கேட்டு மிரட்டிய ஆடியோ ஒன்று கடந்த ஏப்ரல்-03 ஆம் தேதி வைரலானது. அந்த உரையாடலில், தேவையில்லாமல் தனது பெயரையும் தவறாக பயன்படுத்தியிருக்கிறார் என்று ஏற்கெனவே மேலிடத்துக்கு புகார் தெரிவித்திருந்தார், முன்னாள் திருவெறும்பூர் தெற்கு ஒன்றியச் செயலாளர், குண்டூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் எம்.மாரியப்பன். புகார் கொடுத்து, மூன்று மாதங்கள் ஆகியும் கட்சி நடவடிக்கை எடுக்கவில்லை என வருத்தப்பட்ட மாரியப்பன், பாலமுருகனுக்கு எதிராக நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை தொடுத்திருக்கிறார்.

பாலமுருகன் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
பாலமுருகன் –  அன்பில் மகேஷ் பொய்யாமொழி

அமைச்சர் செந்தில் பாலாஜி அரசியலில் உச்சத்தில் இருந்த நேரத்தில், தனக்கு ஆதரவான எம்.எல்.ஏக் களை அணிதிரட்டி, அரவணைத்து வந்தார். திருச்சியில் நேருவுடன் ஒத்துப்போகாத, எம்.எல்.ஏ. பழனியாண்டிக்கு கரூரில் கல்குவாரி நடத்துவதற்கான வாய்ப்புகளை ஏற் படுத்திக் கொடுத்தார். விதிமுறைகளை மீறி கல்குவாரி செயல்படுவதாக, சமூக ஆர்வலர்கள் குற்றஞ்சாட்ட, முடிவில் கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டது. சிறிய அளவிலான குவாரிக்கும் பெரிய அளவிலான குவாரிக்கும் வேறுபாட்டை புரிந்துகொள்ளாமல், கோடிக்கணக்கில் அபராதம் விதிக்கப்பட்டிருப்பதாக நீதிமன்றத்தில் முறையிட்டிருக்கிறார், எம்.எல்.ஏ. பழனியாண்டி. சொந்த சாதி காரரான கே.கே.எஸ்.எஸ்.ஆரை வைத்து தனக்கு எதிராக அரசியல் செய்கிறார், அமைச்சர் நேரு என நேரடியாகவே குற்றஞ்சுமத்துகிறார், எம்.எல்.ஏ. பழனியாண்டி. இந்த விவகாரத்தில் நான் சம்பந்தபட்டிருக்கிறேன் என்பதை நிரூபித்தால் அரசியலை விட்டே விலகிவிடுகிறேன் என பதிலுக்கு சவால் விட்டிருக்கிறார், அமைச்சர் கே.என்.நேரு.

பழனியாண்டி - கே.என்.நேரு
பழனியாண்டி – கே.என்.நேரு

திருநெல்வேலி திமுக எம்.பி. ஞானதிரவியம், திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டலத்தின்கீழ் இயங்கும் பாளையங்கோட்டை தூய யோவான் பள்ளி தாளாளராகவும், திருமண்டல உயர்கல்வி நிலைக் குழுசெயலாளராகவும் இருந்து வருகிறார். இந்நிலையில், திருமண்டல நிர்வாகம் தொடர்பான விவகாரத்தில் எம்.பி.க்கும் திருநெல்வேலி சிஎஸ்ஐ திருமண்டல பேராயருக்கும் கருத்து வேறுபாடு நிலவிவந்த நிலையில், பேராயரை எம்.பி. தனது ஆதரவாளர்களுடன் தாக்கியதாக எழுந்த புகாரில், அவரது ஆதரவாளர்கள் உள்ளிட்டு 33 பேர்மீது போலீசில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து, விளக்கம் கேட்டு எம்.பி.க்கு நோட்டீஸ் அனுப்பியிருக்கிறது, திமுக தலைமை.

ஞானதிரவியம்
ஞானதிரவியம்

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நாடு தழுவிய அளவில் எதிர்க்கட்சிகளை ஒன்றுதிரட்டும் பணியில், தமிழகத்தின் சார்பில் முதல்வர் மு.க.ஸ்டாலின் முக்கிய பங்காற்றிவரும் சூழலில், கிளை செயலாளர் தொடங்கி அமைச்சர், எம்.பி. வரையில் ”சில்லறை”த் தனமான பிரச்சினைகளில் சிக்கி, கட்சிக்கும் ஆட்சிக்கும் குறிப்பாக ஸ்டாலினுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறார்கள் என புலம்பித் தீர்க்கிறார்கள் சக உடன்பிறப்புக்கள்.

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.