டீம் விசிட் என்ற பெயரில் டார்ச்சர் கொடுக்கிறாரா ? – மாவட்ட கல்வி முதன்மை அதிகாரி சிவக்குமார் ?

ஏதோ குற்றவாளியை தேடிப் பிடிக்க கிளம்பி போற மாதிரி, முப்பது நாப்பது பேரை கூட்டிகிட்டு, ஒவ்வொரு ஒன்றியமா ‘டீம் விசிட்’னு இவரு பன்ற அலப்பறை தாங்கலை”னு புலம்புகிறார்கள் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள்.

4
dear movie banner

டீம் விசிட் என்ற பெயரில் டார்ச்சர் கொடுக்கிறாரா, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சிவக்குமார்?

”பள்ளிக்கூடம் திறந்து முழுசா ஒரு மாசம்கூட முடியல. அதுக்குள்ள ஏதோ குற்றவாளியை தேடிப் பிடிக்க கிளம்பி போற மாதிரி, முப்பது நாப்பது பேரை கூட்டிகிட்டு, ஒவ்வொரு ஒன்றியமா ‘டீம் விசிட்’னு இவரு பன்ற அலப்பறை தாங்கலை”னு புலம்புகிறார்கள் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள். திருச்சி மாவட்ட முதன்மை கல்வி அலுவலரான திரு சிவக்குமார் மீதுதான் இந்த குற்றச்சாட்டு.

Happy homes

முன்னதாக, ”திருச்சி மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு உதவி பெறும் தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளிலும் ஜூலை மாதம் முதல் முன்னறிவிப்பின்றி குழு ஆய்வு மேற்கொள்ளும். ஆய்வின்போது, பள்ளி வளாகம், வகுப்பறைகள், மேற்கூரைகள், கழிவறைகள் தூய்மையாக இருக்கிறதா? என்றும், குடிநீர் வசதி உள்ளதா? என்றும் ஆய்வு மேற்கொள்ளப்படும்.

- Advertisement -

- Advertisement -

அத்துடன், எமிஸ் பதிவுகள், மாணவர்களின் தமிழ், ஆங்கிலம் வாசிப்புத்திறன், கணித அடிப்படை செயல்பாடுகள், எண்ணும், எழுத்தும் வகுப்பறை செயல்பாடுகள், கற்றல் விளைவுகள், பாடக்குறிப்பேடு மற்றும் பிற கல்வி இணை செயல்பாடுகள், குறைதீர் கற்பித்தல் நடவடிக்கை மற்றும் பள்ளிக்கு உட்பட்ட இல்லம் தேடிக்கல்வி மையங்களுக்கு செல்லும் மாணவர்களின் விவரங்கள் உள்பட அனைத்தும் சார்ந்து பள்ளிக்கு ஒரு அலுவலர் அல்லது ஒரு ஆசிரியர் பயிற்றுனரை நியமித்து ஆய்வு மேற்கொள்ளப்படும்.

ஆய்வு செய்யும்போது, அந்தந்த வட்டார தலைமையிடம் அல்லது அருகில் உள்ள இடத்தில் ஆய்வு அலுவலர்களால் அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் கூட்டம் நடைபெறும்.” என்று சுற்றறிக்கை ஒன்றை சி.இ.ஓ. சிவக்குமார் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பி வைத்துள்ளார். இதனை தொடர்ந்தே தற்போது, ஆய்வு நடவடிக்கையை அவர் முடுக்கிவிட்டிருக்கிறார். இதற்குத்தான், ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்.

3 kavi national
முதன்மை கல்வி அலுவலர்
முதன்மை கல்வி அலுவலர்
7 bismi bise almathina

”தொடக்கப்பள்ளிகளை பார்வையிடுவதையோ, அவற்றின் கல்வித் தரம் குறித்து மதிப்பீடு செய்வதையோ நாங்கள் தடுக்கவில்லை. மாறாக, ஏதோ குற்றவாளிகளை பிடிக்க கிளம்புவதைப் போல, தனக்கு  கீழ் பணியாற்றும் மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள், ஆசிரியர் பயிற்றுநர்கள், தலைமையாசிரியர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்துக்கொண்டு, ஒவ்வொரு ஒன்றியமாக அதிரடியாக ரெய்டு செய்கிறார்கள். ஆய்வு என்று அவர்கள் சொல்லலாம். ஆனால், அவர்கள் நடத்துவது என்னவோ ரெய்டுதான்.

பள்ளி திறந்து முழுசா ஒரு மாசம் கூட ஆகலை. அதுக்குள்ள அந்த ரிப்போர்ட் கொடு, இந்த ரிப்போர்ட் என்னாச்சுனு கேட்டா எப்படி? அதுவும் ஆசிரியர்களை ஒருமையில் வா, போ என பேசுகிறார். காலையில் ரெய்டை நடத்திவிட்டு, அதே நாள் மாலையில் மீட்டிங் என்கிறார். எல்லாம் முடிய இரவு மணி ஏழரை ஆகிவிடுகிறது…” என குற்றச்சாட்டுகளை அடுக்குகிறார், அகில இந்திய தொடக்கப்பள்ளி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின், அகில இந்திய செயலாளர் வா.அண்ணாமலை.

வா.அண்ணாமலை.
வா.அண்ணாமலை.

மேலும், ”முதன்மை கல்வி அலுவலர் என்பவர் பொதுவில் அந்த கல்வி மாவட்டத்திற்கு முதன்மையானவர் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான, உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மேநிலைப்பள்ளிகள்தான் அவரது நேரடி கட்டுப்பாட்டில் வரும். ஒன்று முதல் எட்டு வரையிலான பள்ளிகளை நிர்வகிக்க மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் இருக்கிறார்கள்.

ஆனால், திருச்சி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருக்கும் சிவக்குமார், தேவையில்லாமல் தொடக்கப்பள்ளி நிர்வாகத்திலும் தலையிடுகிறார். தொடக்கக்கல்வியை கண்காணித்து வழிநடத்த, தமிழகம் முழுவதும் மாவட்டத்துக்கு இரண்டு பேர் வீதம் 58 மாவட்ட கல்வி அலுவலர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு கீழ் வட்டார கல்வி அலுவலர்கள் இருக்கிறார்கள். அவர்களை எல்லாம் தனது கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்.

தமிழகம் முழுக்க 38 முதன்மை கல்வி அலுவலர்கள் இருக்கிறார்கள். ஆனால், இவர் மட்டும்தான் இப்படி செய்கிறார். ஏற்கெனவே, இவர் தஞ்சாவூரில் முதன்மை கல்வி அலுவலராக பணியாற்றிய போதும் இதேபோலதான் விறைப்பாக செய்தார். ஆசிரியர்கள் போராட்டம் எல்லாம் நடத்தினார்கள். இப்போது, இங்கும் தன் வேலையை ஆரம்பித்துவிட்டார்.

படிக்க:

* கல்வி அதிகாரிகளின் டார்ச்சர் – குமுறும் ஆசிரியர்கள் – கல்வி அமைச்சர் கவனத்திற்கு !

* குழப்பமே உன் பெயர்தான் பள்ளிக்கல்வித் துறையோ…..

ஏற்கெனவே, தற்போதைய அரசுக்கு நம்பி வாக்களித்தும் தங்களது கோரிக்கைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்ற அதிருப்தியில் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். தமிழகம் முழுவதும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளிகளில் தலைமையாசிரியர்களே இல்லை. 30% பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே, செயல்பட்டு வருகின்றன. அரசின் மீது அதிருப்தி, ஆள்பற்றாக்குறை என நெருக்கடிகளுக்கு நடுவே ஆசிரியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

கல்வி அமைச்சரின் சொந்த தொகுதியிலேயே ஒரு மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி இவ்வாறு நடந்து கொள்வது வேதனையளிக்கிறது. குறிப்பாக, கல்வி அமைச்சருடன் தான் நெருக்கமாக இருப்பதாக இவர் காட்டிக் கொள்கிறார். அந்த தைரியத்தில்தான் இவர் இப்படி நடந்துகொள்கிறாரோ என்ற சந்தேகம் எழுகிறது. இதனை கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்களின் கவனத்திற்கும் கொண்டு சென்றிருக்கிறோம்.

அடுத்து மணிகண்டம் ஒன்றியத்தில், டீம் ரெய்டு நடத்தப்போவதாக அறிவித்திருக்கிறார். அதிரடி ரெய்டு என்ற பெயரில் வரம்பு மீறி கெடுபிடி காட்டும் நடவடிக்கையை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் அவர்கள் தவிர்க்க வேண்டுமென்று கோருகிறோம். எங்களது கோரிக்கைக்கு மதிப்பளிக்காமல், அவர் இதுபோன்ற ரெய்டு நடவடிக்கையை தொடர்வார் எனில், தமிழகம் முழுவதும் ஆசிரியர்களை ஒருங்கிணைத்து திருச்சியில் அடுத்தக்கட்ட போராட்டத்தை நடத்துவோம்.” என எச்சரிக்கை விடுக்கிறார், வா.அண்ணாமலை.

குற்றச்சாட்டுக்கு ஆளாகியிருக்கும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திரு சிவக்குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டோம். அடுத்தடுத்து இரண்டு முறை அழைத்தும் நமது அழைப்பை அவர் ஏற்கவில்லை.

வே.தினகரன்.

3 kavi national
4 Comments
 1. S.P.Saravanan says

  பள்ளி கல்வி துறை அமைச்சர் சொந்த தொகுதியில் உள்ள பாப்பா குறிஞ்சி காட்டூர் ஆதிதிராவிடர் மேல் நிலை பள்ளியில் ஒரு சில ஆசிரியர்கள் 10/15 வருடமாக பணியிட மாறுதல் இல்லாமல் ஒரே இடத்தில் பணியில் இருந்து கொண்டு அவர்கள் வைத்தது தான் சட்டம் என்று சட்டாம்பிள்ளை வேலை செய்வது மட்டும் அல்லாமல் பல வழிகளில் ஊழல் செய்து கொண்டு இருக்கின்றார்கள் அவர்கள் உடனடியாக பணியிட மாற்றம் செய்யப்பட வேண்டும் என்பது சக ஆசிரியர்கள் கோரிக்கை நடவடிக்கை எடுப்பாரா கல்வி துறை அமைச்சர் அல்லது கட்சிகாரர் என்று கண்டும் காணாமல் இருந்து விடுவாரா

 2. சரவணன் says

  குழு ஆய்வு என்பது மிகப்பெரிய தவறு இல்லை, அரசுப் பள்ளியின் அவல நிலையை வெளி உலகத்திற்கு காட்டாமல் அவர்களாகவே திருத்தி கொள்வதற்காகவே அமைக்கப்பட்டது தான் குழு ஆய்வு, மேற்கண்ட முதன்மை கல்வி அலுவலர் அவர்களால் தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களும் பார்வை செய்த பொழுது மேற்கண்ட புகார்கள் ஏதும் எழவில்லை, ஆனால் திருச்சி மாவட்டத்தில் மட்டும் ஏன் இப்படி இருக்கிறது, மிகச் சிறந்த கல்வி ஆளுமையை தஞ்சாவூர் மாவட்டத்தில் கொடுத்தவர்,சிறந்த ஆசிரியர்களை பெருமைப்படுத்தியவர், திருச்சி மாவட்டத்திற்கு ஆசிரியர்கள் யாரும் இல்லையா, மிகச் சிறந்த ஆளுமை மிக்க முதன்மை கல்வி அலுவலரை அவர் பணி செய்ய விடுங்கள், ஏற்கனவே தொடக்கக் கல்வித்துறை தன்னுடைய பெயரை இழந்து கொண்டிருக்கிறது, அதை மீட்டெடுக்க வேண்டுமானால் குழு ஆய்வு மிக அவசியம், திரு அண்ணாமலையும், இந்தக் கட்டுரையை எழுதிய பத்திரிகை நிருபர் சில உண்மைகளை புரிந்து கொள்ளட்டும்

  1. A. John Milton J.arokiasamy says

   Yes. Correct the above comments. Because teachers are not ready to co-operate with Education Department always telling complaint about Officers and School Childrens. Is this correct? They want always no one should ask any questions. Bell ranged then suddenly open the Lunch, and Month ended then immediately salary. This is their policy. In between anyone ask questions immediately the Teachers Association President will support along with team. Unwantedly making rumours on the Educational Officers by using our Press and Media. So horrible. Do you know about the teacher’s salary? This may be 50000 to 150000/- per every teachers. But their working time 9 am to 4:10pm . But the individual teachers working (teaching) may be 1 or 2 or Max 3 hours only. No one teachers prepared notes of lesson and no one knows how to enter Emmis. But unwantedly making strikes always for any Officer and about Salary. If we support them God will punish every one. Please never support the teachers. Do you know about the Trichirappalli Lalgudi Taluk Poovalur Govt Hr. Sec. School? One Sir raped one girl student. She had pregnant Sir in jail. Nothing teachers not opened their mouth. In that School HM Mrs spoiled one girl’s exam life. How much trouble to that girl but the HM Posali was just transferred to the another school. Is this correct? CEO and his PA discussed more then they transferred the HM Posali. What a great punishment? High court will not look in this. Social Media and Press will not look in this. Student’s welfare Organization also will not look in this. But God only knows and God only will punish that CEO Sivakumar and his PA.. Humbly i am requesting our Press please never support the teachers please please please….

 3. A. John Milton J.arokiasamy says

Leave A Reply

Your email address will not be published.