ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் பணியாட்கள்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

திருச்சி மாவட்டம் துறையூர் அடுத்த சேனப்பநல்லூர் கிராமத்தைச் சேர்ந்த 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்யும் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தங்களுக்கு கடந்த மூன்று மாத காலமாக வேலை தரவில்லை எனவும் 100 நாள் வேலைத்திட்டத்தில் தற்போது பணியாளர்களின் கருவிழியை பதிவு செய்யும் புதிய நடைமுறையில் பெரும்பாலான பெண்களின் கருவிழி பொருந்தாமல் உள்ளதால் 100 நாள் வேலை திட்டத்தில் பணி செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் முன்பே இருந்த கைவிரல் ரேகை பதிவு மற்றும் 10 பேர் குழுவாக சேர்ந்து போட்டோ எடுத்து பதியும் முறையை மீண்டும் நடைமுறைப்படுத்த கோரியும், தொடர்ந்து தங்களுக்கு 100 நாள் வேலை வழங்கிடக் கோரியும் துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் பணி நிமித்தமாக வெளியே சென்று விட்டதால் முற்றுகையிட்ட பெண்கள் ஏமாற்றத்துடன் அங்கிருந்து திரும்பிச் சென்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.