ஐயா! ரசீது இருக்கு வீட்டை காணோம் காவல் நிலையத்தை பதற வைத்த புகார்
ஐயா! ரசீது இருக்கு வீட்டை காணோம் காவல் நிலையத்தை பதற வைத்த புகார்
திரைப்படத்தில் வரும் வடிவேலின் நகைச்சுவை போல ஐயா ரசீது இருக்கு, “என் வீட்டு கிணத்த காணோம்”. என்பதைப்போல தஞ்சை மாவட்டம் திருப்பனந்தாள் அருகே சிதம்பரநாதபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவர் அப்பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். சென்ற வருடம் 2019 பிரதமர் வீடு கட்டுவதற்கான உரிமை பெற்றுள்ளார். ஆனால் அப்போது அவரிடம் போதிய பணம் இல்லாததாளும், தனது மகள்களுக்கு திருமணம் செய்யவேண்டிய நிலை இருந்ததாலும் அவர் வீடு கட்டும் உரிமையை கொடுக்க வந்த அதிகாரியிடம் என்னால் இப்போதைய சூழ்நிலையில் கட்டமுடியாது என்று கூறியுள்ளார்.
சமீபத்தில் வீட்டு உரிமை பெற்றவர்களின் வீடுகளை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகள் ராஜேந்திரனிடம் எங்கே உங்களது வீடு என்று கேட்டுள்ளனர் அதற்கு ராஜேந்திரன் ஐயா நான் அன்றே எனக்கு வீடு வேண்டாம் என்றும் என்னுடைய குடும்ப சூழ்நிலையின் காரணமாக இப்போது வீட்டினை கட்ட முடியாது என்றும் அப்போது வந்த அதிகாரிகளிடம் தெளிவாக கூறி விட்டேன் என்றுள்ளார் அதற்கு ஆய்வு செய்துவந்த அதிகாரிகள் உங்களின் வங்கிக் கணக்கில் 50,000 எடுத்துள்ளீர்கள் எப்படி என்று ஏமாற்றுகிறீர்களா என பகிரங்கமாக பேசியுள்ளனர்.
இதனைக் கேட்ட ராஜேந்திரன் ஐயா நான் எந்த பணத்தையும் எடுக்கவில்லை எந்த பணமும் எங்களது வங்கி கணக்கிற்கு வரவில்லை அதுவும் நீங்கள் சொல்லும் அளவிலான பணம் நாங்கள் இதுவரையில் எங்கள் வங்கியில் கணக்கிலிருந்து போட்டதும் இல்லை எடுத்ததும் இல்லை நான் வேண்டுமானாலும் எனது வங்கி கணக்கின் பணம் போட்டது எடுத்ததற்கான அறிக்கையை வங்கியிலிருந்து வாங்கி தங்களிடம் கொடுக்கிறேன் நீங்கள் வேண்டுமானாலும் பாருங்கள் என்றுள்ளார். அதற்கு அந்த அதிகாரிகள் கொஞ்சம் கூட தலையை அசைக்காமல் நீ எப்படியாவது வீட்டை கட்டியே ஆக வேண்டும் என்று இல்லை என்றால் உன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று மிரட்டி விட்டு சென்றுள்ளனர், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான ராஜேந்திரன் திருப்பனந்தாள் காவல் நிலையத்திற்கு புகார் ஒன்று அளித்துள்ளார் அப்புகாரில் ரசீது இருக்கு வீட்டை காணோம் என்று மையப்படுத்தி புகார் கொடுத்துள்ளார். இதனால் காவல் நிலையத்தில் பெரும் பரபரப்பு நிலவியது…
இதுதொடர்பாக ராஜேந்திரனிடம் அங்குசம் இணைய செய்திக்காக பேசியபோது, அவர் ஐயா ஏழைகளின் வயிற்றில் அடித்து காசு சம்பாதிக்கும் அதிகாரிகள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள் ஆனால் “தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் இறுதியில் தர்மமே வெல்லும்” என்று கூறி முடித்தார்.
செய்தி : ஜித்தன்