கோவில்பட்டி – 900 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை கைது செய்த காவல்துறை !
கோவில்பட்டி அருகே ஆம்னி காரில் ரேஷன் அரிசி கடத்தியவரை போலீசார் கைது செய்து 900 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து கிழவிப்பட்டி வழியாக கயத்தாருக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக கோவில்பட்டி காவல்துறை துணை கண்காணிப்பாளர் ஜெகநாதனுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனை தொடர்ந்து உதவி ஆய்வாளர் செந்தில் தலைமையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி கார் ஒன்றை போலீசார் சோதனை செய்தபோது அதில் 900 கிலோ ரேஷன் அரிசி இருப்பது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து போலீசார் காரை ஒட்டி வந்த அய்யனார் ஊத்து கிராமத்தைச் சேர்ந்த மணிகண்டனை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேஷன் அரிசியை கடத்தி வந்து தெரிய வந்தது.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதைடுத்து போலீசார் ரேஷன் அரிசி மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து தூத்துக்குடி குடிமை பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு உதவி ஆய்வாளர் அரி கண்ணனிடம் ஒப்படைத்தனர். இதனை தொடர்ந்து குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரவு போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர்.
— மணிபாரதி.