அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அவர் மீது மட்டும் ஏன் இவ்வளவு வன்மம் ?

திருச்சியில் அடகு நகையை விற்க

இப்ப எல்லாம் நான் ஒரு அரசியல் தலைவரை அதிகம் நினைக்கிறேனா அது கலைஞர் அவர்கள்தான். நிகழ்காலத்திலே அவர் மீது  எவ்வளவு பொய் பிரச்சாரம், வன்மம், சாதி வெறுப்பு.

அப்ப 75 ஆண்டு கால பொது வாழ்க்கையில் எத்தனை எத்தனை ஆயிரம் விமர்சனங்களையும், பொய்களையும் வெறுப்பையும் பார்த்திருப்பார்? ஆனால், எல்லாவற்றையும் கடந்து எத்தனை எத்தனை மக்கள் நலத்திட்டங்கள் எப்படி இவருக்கு மட்டும் அப்படி ஒரு சிந்தனை?

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்தித்தால் மட்டுமே அப்படி திட்டங்களை செயல்படுத்த முடியும். BC முஸ்லிம்களுக்கு இட ஒதுக்கீடு, அருந்ததியர்களுக்கு இட ஒதுக்கீடு அதெல்லாம் உண்மையில் அந்த மக்களின் வாழ்க்கையை பற்றி சிந்தித்தால் மட்டுமே வரும். நாம திருநங்கைகளை எவ்வளவு எளிதாக, ”ஒம்போது”, ”அஜக்” என்றெல்லாம் சொல்லி நகையாடியிருப்போம்.

ஆனால், கலைஞர் அவர்களை இழிவுபடுத்துவது எந்த அளவுக்கு யோசிச்சிருந்தால்  திருநங்கைகள் என ஒரு பெயர் சூட்டி அவர்களையும் கெளரவமாக  அழைக்க வழி வகுத்திருப்பார்.

முதல்வர் பிறந்தநாள்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இதேதான் நொண்டி, செவிடன், ஊமையன், குருடன் இப்படி எல்லாம் அழைக்கப்பட்டவர்களை மாற்றுத்திறனாளிகள் என அடையாளப்படுத்திருப்பார். ஒரு மாற்று திறனாளி நம் வீட்டில் 10 வருடங்களுக்கு முன்பு இருந்திருந்தால் அந்த வலி எப்படி என்பது தெரிந்திருக்கும்.

இது எல்லாம் சின்ன எடுத்துக்காட்டிற்கு. இதுபோல இன்று நாம் அடையும் நூற்றுக் கணக்கான வாய்ப்புகள் எல்லாம் கலைஞர் உருவாக்கியது. என் பள்ளி காலங்களில், இப்படி ஒரு தலைவர் இருந்தாரா ? என வியந்தது காமராஜரை.

கல்லூரி காலங்களில் எனக்கு கலைஞரை  பிடிக்காது. சொட்டையன் இவனெல்லாம் எப்ப சாவான் என நினைத்திருக்கிறேன். காரணம் ஈழப் பிரச்சனை! இன்று அமைதியாக உட்கார்ந்து யோசித்தால், எவ்வளவு கேவலமான சிந்தனையுடன் இருந்துள்ளேன் எனப் புரிகிறது.

உண்மையாகவே, ஒவ்வொருவரும் நேசிக்க வேண்டியதும், தமிழ்நாட்டில் பிறந்த ஒவ்வொருவரும் நன்றி கூற வேண்டியதும் கலைஞருக்குதான். இப்போது எதாவது நண்பர்களுக்குள்ள அரசியல் பேச்சு வந்தால் கூட, என்னை அறியாமல் கலைஞர் வந்து விடுகிறார். உண்மையாவே தமிழ்நாட்டின் தன்னிகரில்லா தலைவன் கலைஞர்!

—   சக்தி ராஜேஸ்வரி

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.