மே 16-ல் வருகிறார் சூரியின் ‘மாமன்’

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

லார்க் ஸ்டுடியோஸ்’ பேனரில் கே.குமார் தயாரிப்பில்,  சூரி கதை நாயகனாக நடிக்க,  ‘விலங்கு’ வெப் சீரிஸ் புகழ் இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘மாமன்’ படம் வரும் மே 16 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

சூரிக்கு  ஜோடியாக முன்னணி நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடித்துள்ளார். சீனியர் நடிகர் ராஜ்கிரண் மிக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவர்களுடன் ‘லப்பர் பந்து’ புகழ் சுவாஷிகா, கீதா கைலாசம், விஜி சந்திரசேகர், நிகிலா சங்கர், பால சரவணன், பாபா பாஸ்கர் மற்றும் குழந்தை நட்சத்திரம் பிரகீத் சிவன் ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

சூரியின் 'மாமன்'‘கருடன்’ படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப்பிறகு ‘லார்க் ஸ்டுடியோஸ்’ தயாரிப்பில்,  சூரி நடிக்கும் இரண்டாவது படம் ‘மாமன்’ என்பது குறிப்பிடத்தக்கது.

திருச்சி   பின்னணியில் நடக்கும் கதைக்களத்தில், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசிக்கும் வண்ணம், அனைத்து அம்சங்களும் நிறைந்த கமர்ஷியல் படமாக இப்படத்தை உருவாக்கியுள்ளார் பிரசாந்த் பாண்டியராஜ்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் படத்தின் டீசர், டிரெய்லர் பற்றிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும்.

தொழில் நுட்பக்குழு

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

இசை – ஹேசம் அப்துல் வஹாப்

ஒளிப்பதிவு – தினேஷ் புருஷோத்தமன்

கலை இயக்கம் –  துரை ராஜ்

படத்தொகுப்பு – கணேஷ் சிவா

சண்டைப்பயிற்சி – மகேஷ் மேத்யூ

மக்கள் தொடர்பு – யுவராஜ்.

 

—   மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.