சென்னையை உலுக்கிய சூட் கேஸ் கொலை ! மூளையை வருத்து ருசித்த கொலையாளி?

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

ளம்பெண் துண்டு துண்டாக கொலை செய்யப்பட்டு , மூளையை பிடுங்கி  கடாயில் வறுத்து சாப்பிட்ட சம்பவம்  சென்னையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவருக்கு வயது 26. இவர் பி.இ.மெக்கானிக் இன்ஜினியரிங் படித்துள்ளார். சென்னை துரைப்பாக்கத்தில் தனது அக்கா வீட்டில் தங்கி  பெருங்குடியில் உள்ள கார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் அடிக்கடி பெண்களை அழைத்து வந்து உல்லாசமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

கொலையாளி மணிகண்டன்
கொலையாளி மணிகண்டன்

 

இந்த நிலையில்  கடந்த 17- ஆம் தேதி , அவரது அக்கா மற்றும்  குடும்பத்தினர் வெளியூருக்கு சென்றிருந்த நேரத்தில், மாதவரம் பொன்னியம்மன் மேட்டைச் சேர்ந்த திருமணம் ஆகாத தீபா (30) என்பவரை புரோக்கர் உதவியுடன் துரைப்பாக்கத்தில் உள்ள தனது அக்கா வீட்டிற்கு அழைத்து வந்து உல்லாசமாக இருந்துள்ளார்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இதனை அடுத்து மணிகண்டனன் பேசியபடி முழு  தொகையான 18,000 கொடுக்காமல், ரூ12,000 மட்டுமே கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் தீபாவுக்கும் மணிகண்டனுக்கு இடையே தகராறு ஏற்பட்டிருக்கிறது.

ஒரு கட்டத்தில் போதையில் இருந்த மணிகண்டன் வீட்டில் இருந்த சுத்தியலை எடுத்து தீபாவின் தலையில் அடித்துள்ளார்.  இதில் மண்டை உடைந்து சம்பவ இடத்திலேயே தீபா இறந்துள்ளார். உடலை எப்படி வெளியே கொண்டு செல்வது என்று யோசித்து  பிறகு துரைப்பாக்கம் பகுதியில் ஒரு கடையில் சூட்கேஸை வாங்கி வந்து கொலை செய்யப்பட்ட தீபாவின் இடுப்பு மற்றும் கால் எலும்புகளை தனித்தனியாக வெட்டி சூட்கேசில் அடைத்துள்ளார். நேற்று அதிகாலை யாருக்கு தெரியாமல் கொலை செய்யப்பட்ட வீட்டிலிருந்து 2 வது தெருவில் புதிததாக கட்டுமான பணிகள் நடந்து வரும் வீட்டின் முன் வீசிவிட்டு சென்றுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட தீபா
கொலை செய்யப்பட்ட தீபா

 

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இதனை அடுத்து, துரைப்பாக்கம் குமரன் குடில் குடியிருப்பு பகுதியில் ரத்தம் வடிந்தப்படி சூட்கேஸ் ஒன்று கிடப்பதாகவும்; அதில் துர்நாற்றம் வீசுவதாகவும் அப்பகுதியில் மக்கள் காலையிலேயே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மர்மமான சூட்கேஸை திறந்து பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். அதில் உடல் பாகங்களை தனித்தனியாக இருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்த போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், சொந்த ஊருக்கு சென்ற அக்கா மற்றும் தாய் குடும்பத்துடன் வீட்டிற்கு திரும்பி வந்தபோது வீட்டில் மணிகண்டன் கூலாக படுத்துக் கிடந்ததாகவும்; ஏன் வேலைக்கு செல்லாமல் படுத்து கிடக்கிறாய் என அவரது தாய் கேட்டதற்கு தலைவலி என்று கூறியிருக்கிறார்.  பின்னர், போலீசார்  மணிகண்டன் இருக்கும் இடத்தை தேடி வந்து கைது செய்த பிறகுதான் கொலை சம்பவத்தில் ஈடுபட்டதை கேட்டு  குடும்பத்தினர் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

விசாரணையில் திடுக் தகவல்

 

கொலை செய்யப்பட்ட பெண் தீபாவின் மூளையை தனியாக எடுத்து கடாயில் வெங்காயம், தக்காளி, கடுகு, சீரகம் உள்ளிட்டவை போட்டு வறுத்து ருசித்து சாப்பிட்டதாக  மணிகண்டன் அளித்த  வாக்குமூலத்தால் போலீசாரே  வெலவெலத்துப் போய் கிடக்கிறார்கள்.

சிசிடிவி காட்சிகளைக் கொண்டு, கொலை நடந்த ஒரு சில மணி நேரத்திலேயே கொலையாளி மணிகண்டனை   கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  –   கேஎம்ஜி

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.