சௌமா இலக்கிய விருதுகள் – 2026 வெளியானது அறிவிப்பு !
திருச்சி – மணப்பாறையில் இயங்கிவரும் சௌமா கல்வி மற்றும் சமூக நல அறக்கட்டளை ஆண்டுதோறும், கலை இலக்கிய பிரிவுகளில் சௌமா விருதுகளை வழங்கிவருகிறது. கடந்த ஏழு வருடங்களாக தொடர்ந்து வரும் நிலையில், தற்போது எட்டாம் ஆண்டுக்கான (2026) போட்டி அறிவிப்பை சௌமா இலக்கிய விருதுகள் நிறுவனர் சௌமா. இராஜரெத்தினம் மற்றும் ஒருங்கிணைப்பாளர் முனைவர் தமிழ்மணவாளன் ஆகியோர் வெளியிட்டிருக்கிறார்கள்.
நவீன சிறுகதை, சிறுகதை, நாவல், சிறுவர் இலக்கியம் ஆகிய பிரிவுகளில் தேர்வு செய்யப்படும் ஒவ்வொரு நூலுக்கும் ரூ5,000 பரிசுத்தொகையுடன், “சௌமா இலக்கிய விருது” வழங்கப்படும். 2025 ஆம் ஆண்டு வெளியான நவீன கவிதை, நாவல், சிறுகதை மற்றும் சிறுவர் இலக்கியம் நூல்களின் 2 பிரதிகளை, ஏப்ரல்-15 ஆம் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும் என்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
நூல்களை அனுப்பி வைக்க வேண்டிய முகவரி : முனைவர் தமிழ்மணவாளன், எண்:18, பத்மாவதி நகர், மாதவரம் பால்பண்ணை, சென்னை – 600 051. அலைபேசி – 9444796336
வருடந்தோறும் நடைபெறுவது போலவே, மணப்பாறையில் நடைபெறவிருக்கும் இலக்கிய விழாவில் விருதுகள் வழங்கப்படும் என்பதாக தெரிவித்திருக்கிறார்கள்.
– அங்குசம் செய்திப்பிரிவு.








Comments are closed, but trackbacks and pingbacks are open.