அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சோயா கபாப் ! சமையல் குறிப்பு – 10

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வணக்கம் சமையலறை தோழிகளே! நாம் தினமும் புது வகையான ஸ்நாக்ஸ் ரெசிப்பிஸ் பார்த்து வருறோம். அந்த வகையில இன்னைக்கு குழந்தைகளுக்காக ஸ்பெஷலா செய்யப் போறது சோயா கபாப் தாங்க, சரி வாங்க இதை எப்படி செய்யறதுன்னு பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:-

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

சோயா சங்ஸ் (மீல் மேக்கர்) 1 கப், பெரிய வெங்காயம் பொடியாக நறுக்கியது ஒரு கப், பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது 2, கருவேப்பிலை கொத்தமல்லி பொடியாக நறுக்கியது சிறிதளவு, கரம் மசாலா 1 டேபிள் ஸ்பூன், ரெட் சில்லி பவுடர் 1 டேபிள் ஸ்பூன், சீரகத்தூள் 1 டேபிள் ஸ்பூன், ஓமம் சிறிதளவு, சாட் மசாலா 1 டேபிள் ஸ்பூன், உப்பு தேவையான அளவு, எண்ணெய் பொறிக்க தேவையான அளவு, கடலை மாவு 3 ஸ்பூன்.

செய்முறை:-

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

தமிழக முதல்வர் விஜய் பிறந்தநாள் வாழ்த்து

முதலில் மீல் மேக்கரை சுடுதண்ணீரில் போட்டு ஐந்து நிமிடம் கழித்து வடிகட்டி மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும். அதனுடன் நறுக்கிய வெங்காயம் , பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய், கருவேப்பிலை, கொத்தமல்லி, கரம் மசாலா, ரெட் சில்லி பவுடர், சீரகத்தூள், சாட் மசாலா, ஓமம், உப்பு, கடலை மாவு இவற்றை சேர்த்து நன்கு பிசைந்து உங்களுக்கு விரும்பிய வடிவத்தில் கபாப் செய்து வைத்துக் கொள்ளவும். இப்போது, பொறிக்க எண்ணெய் காய்ந்ததும் அதில் செய்து வைத்திருந்த கபாப்பை போட்டு மிதமான சூட்டில் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுக்கவும்‌.

சோயா கபாப்
சோயா கபாப்

இப்போது சுவையான வெஜ் சோயா கபாப் தயார் இதனை மயோனைஸ் அல்லது சாஸ் உடன் சுவைத்து மகிழுங்கள்.

 

– பா. பத்மாவதி.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.