திருச்சி மாவட்ட காவல்துறையினருக்கு எஸ்.பி அறிவுறுத்தல் !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

14.06.2025 திருச்சி மாவட்ட காவல் அலுவலத்தில் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செ.செல்வ நாகரெத்தினம், இ.கா.ப  புதிதாக வரப்பெற்ற 57 Body worn Camera-க்களை 44 இரு சக்கர ரோந்து வாகனங்களுக்கும். 11 நான்கு சக்கர ரோந்து வாகனங்களையும்  நெடுஞ்சாலையில் மற்றும் காவல் நிலைய இரவு ரோந்து பணி மேற்கொள்ளும் 57 ரோந்து காவலர்களுக்கு  வழங்கினார். அதில் மூன்று வாகனம் ஒட்டுநர்களுக்கு Body worn Camera அணிவித்து கீழ்க்கண்ட அறிவுரைகளை வழங்கி அதன் பின்னர் மேற்கண்ட வாகனங்களை கொடியசைத்து துவங்கி வைத்தார்.

பின்னர் அவர் பேசிய போது, “ரோந்து பணியில் ஈடுபடும் போது எந்நேரமும் நாம் எச்சரிக்கையாக இருப்போம் என்று சொல்ல முடியாது. அப்படிப்பட்ட நேரத்தில் முன்கூட்டியே நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த body camara பயன்படுத்திக் கொள்ளலாம். இது நமக்கான தற்காப்பு பொருளாக உள்ளது.

Sri Kumaran Mini HAll Trichy

எஸ்.பி அறிவுறுத்தல்கோயில் திருவிழாக்கள் போன்றவற்றில் பாதுகாப்பு பணிக்கு செல்லும்போது இதனை கட்டாயமாக அணிந்து இருந்தால், சில குற்றச்சம்பவங்களில் ஈடுபடக் கூடியவர்களும் இதில் பதிவாக வாய்ப்பு உள்ளது.

  1. இரு சக்கர மற்றும் நான்கு சக்கர ரோந்து வாகன காவலர்கள் அவரவர் பணி துவங்கும் போது மேற்கண்ட Body worn Camera-வை Charge உள்ளதா என சரிபார்த்து பணியினை துவங்க வேண்டும்.
  2. எந்தவொரு தகவல்/பிரச்சனை சம்பந்தமாக விசாரணைக்கு செல்லும்போது Body worn Camera-ஐ On செய்து பதிவு செய்ய வேண்டும். மேலும் இந்த பதிவுகள் அவரவருக்கு தற்காக்கும் விதமாக இருக்குமென மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கியுள்ளார்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

தினந்தோறும் அவரவர் பணிமுடியும்போது காவல் நிலையங்களில் அதன் பதிவுகளை காவல் நிலைய கணிபொறியில் பதிவிறக்கம் செய்து வைக்க வேண்டும்.

  1. இந்த Body worn Camera-வை பாதுகாப்பாக கையாளவும் மற்றும் காவலர்கள் கண்ணியத்துடன் பேசவும் அறிவுறுத்தப்படுகிறது.
  2. இந்த Body worn Camera பதிவின் மூலம் பிரச்சனையின் போது காவல்துறை பொதுமக்களிடையே நடைபெறும் விவாதங்களுக்கு உண்மை நிலை காண ஏதுவாக இருக்கும்.

மேலும், இந்த Body worn Camera மூலம் ஒவ்வொருவரது இருப்பிடத்தை மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து கண்காணிக்க இயலும் எனவும், இதன் மூலம் காவலர்கள் எந்தெந்த பகுதிகளில் ரோந்து பணியினை செய்துகொண்டிருக்கிறார் என்பதையும், சம்பவ இடத்திற்கு எந்த ரோந்த வாகனத்தை உடனடியாக அனுப்பலாம் என்பதையும் இதன்மூலம் அறிய உதவியாக இருக்கும்.

எஸ்.பி அறிவுறுத்தல்திருவரம்பூர் ரோந்து வாகனம், ஜீயபுரம் டு மணப்பாறை ரோந்து வாகனம், சோமரசம்பேட்டை ரோந்து வாகனங்கள் இதனை கட்டாயமாக பயன்பாட்டில் வைத்திருக்க வேண்டும். காரணம் அந்தப் பகுதியில் அதிகமாக சாலை விபத்து நடந்து வருகிறது” என்றார்.

மேலும், பொதுமக்கள் ஏதேனும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்க நேரிட்டால் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உதவி எண் 8939146100-க்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் என திருச்சிமாவட்ட காவல் கண்காணிப்பாளர்  செ.செல்வநாகரெத்தினம், இ.கா.ப  தெரிவித்துள்ளார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.