திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திருநங்கைகளுக்காக சிறப்பு முகாம்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் திருநங்கைகளுக்கு முழுமையான சமூக பாதுகாப்பையும், சமூக அங்கீகாரத்தை அளித்து அவர்களையும் சமூகத்தின் ஓர் அங்கமாக ஏற்றுக் கொள்ளும் பொருட்டு இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழ்நாடு அரசின் மூலம் ‘தமிழ்நாடு திருநங்கைகள் நலவாரியம்” 2008 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டது.

வேட்டியை மடித்துக்கட்டிக் கொண்டு களத்தில் இறங்கிவிடும் எம்.எல்.ஏ. !

அவ்வாரியத்தின் மூலம் திருநங்கைகள் அடையாள அட்டை, குடும்ப அட்டை, சுயதொழில் துவங்க மானிய தொகை, கல்வி உதவிதொகை, சுய உதவி குழு பயிற்சி மற்றும் மானியதொகை, முதலமைச்சரின் மருத்துவகாப்பீட்டு திட்ட அட்டை, ஆதார் திருத்தம், ஆகியன வழங்கபட்டு வருகின்றன.

Srirangam MLA palaniyandi birthday

திருநங்கை நலவாரியம் மற்றும் திருநங்கைகளுக்காக செயல்படும் தொண்டு நிறுவனங்கள் மூலம் வருகின்ற 24.06.2025 அன்று திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் உள்ள கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. எனவே இச்சிறப்பு முகாமில் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் உள்ள அனைத்து திருநங்கைகளும் கலந்து கொண்டு பயன்பெற திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்  மா.பிரதீப் குமார்,இ.ஆ.ப., தெரிவித்துள்ளார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.