உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம்
மத்திய அரசின் பஞ்சாயத்துராஜ் அமைச்சகத்தின் அறிவுறுத்தலின் படி காந்தி ஜெயந்தி அன்று செயின்ட் ஜோசப் கல்லூரியின் விரிவாக்கத்துறை உன்னத பாரத இயக்கத்தின் 2.0 கீழ் தேர்தெடுக்கப்பட்ட நாகமங்கலம் அளுந்தூர் சேதுராப்பட்டி மற்றும் இனாம் மாத்தூர் ஆகிய கிராம பஞ்சாயத்துகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது
இக்கூட்டத்தில் இனாம் மாத்தூர் ஊராட்சியில் பெண்களுக்கான உடல் நல ஆலோசனை மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த உடலுக்கு தீங்கு விளைவிக்காத நாப்கின் அறிமுகம் செய்யப்பட்டது.
அளுந்தூர் ஊராட்சி சூரக்குடி கிராமத்தில் மத்திய அரசின் மருத்துவ காப்பீடு திட்டத்தின் பயன்கள் மத்திய அரசின் பெண் குழந்தைகளுக்கான திட்டங்கள் மற்றும் சுயசார்பு இந்தியா குறித்த பல்வேறு தகவல்கள் மக்களுடையே எடுத்துரைக்கபட்டது.
சேதுராபட்டியில் பெண்கள் குழந்தைகள் வன்முறைக்கு எதிரான உறுதி மொழி எடுத்தார்கள் ஊராட்சி மன்ற தலைவர்கள் துணை தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் செயலர் அங்கன்வாடி பணியாளர்கள் ஊர் முக்கியஸ்தர்கள் பொதுமக்கள் விரிவாக்கத்துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் கல்லூரியின் மாணாக்கர்கள் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.