தை அமாவாசை பித்ரு பூஜைக்கு மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில்

0

தை அமாவாசை பித்ரு பூஜைக்கு மதுரையில் இருந்து காசிக்கு சிறப்பு ரயில்

தை அமாவாசை அன்று காசியில் முன்னோர்களுக்கு பூஜை செய்ய மதுரையிலிருந்து சிறப்பு ரயில் இயக்கப்பட இருக்கிறது. இந்த ரயில் மதுரையில் இருந்து ஜனவரி 16 அன்று புறப்பட்டு ஜனவரி 19 அன்று திரிவேணி சங்கமத்தில் புனித நீராடி அலோபி தேவி சக்தி பீடம் தரிசனம். ஜனவரி 20 அன்று கங்கையில் புனித நீராடி காசி விஸ்வநாதர், அன்னபூரணி, ஸ்ரீ விசாலாட்சி சக்தி பீட தரிசனம் மற்றும் மாலை ஆரத்தியில் பங்கேற்பது.

ஜனவரி 21 அன்று கயாவில் முன்னோர்களுக்கு பிண்ட பூஜை செய்து மங்கள கௌரி சக்தி பீட தரிசனம். ஜனவரி 23 அன்று காமாக்கியா தேவி சக்தி பீட தரிசனம். ஜனவரி 25 அன்று கொல்கத்தா காளி தேவி, காளிகாட், பேளூர் மடம், தச்சினேஸ்வரர் தரிசனம். ஜனவரி 26 அன்று ஒடிசா பூரி கொனார்க் சூரிய கோயில், சந்திரபாகா கடற்கரை, பூரி ஜெகநாதர், பிமலா தேவி சக்தி பீடம் தரிசனம் முடித்து ஜனவரி 28 அன்று சுற்றுலா ரயில் மதுரை வந்து சேருகிறது.

4 bismi svs

இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டி ரயில் கட்டணம் தங்குமிடம் உணவு உள்ளூர் பேருந்து வசதி ஆகிய உட்பட நபர் ஒருவருக்கு ரூபாய் 21500 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. குளிர்சாதன மூன்றடுக்கு படுக்கை வசதி பெட்டியில் பயணம் செய்ய கட்டணம் ரூபாய் 27800 வசதிக்கப்படுகிறது.

- Advertisement -

பயண சீட்டுகளை www.ularail.com என்ற இணையதளத்திலும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்களுக்கு 7305858585 என்ற அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.

-மதுரை ஷாகுல்

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.