திருச்சியில் கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சு மற்றும் கவிதை போட்டிகள் !

0

திருச்சியில் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் விழா கல்லூரி மாணவர்களுக்குப் பேச்சு மற்றும் கவிதை போட்டிகள்.

திருச்சியில் செயல்பட்டு வரும் முத்தமிழ்ச் சங்கம் சார்பில் மகாகவி பாரதியார் விழா 28.10.2023 சனிக்கிழமை காலை 10.00 மணிக்குத் திருச்சி இரயில்நிலையச் சந்திப்புக்கு அருகில் உள்ள அருண் தங்குமிடத்தில் உள்ள மேக்சி அரங்கில் நடைபெறவுள்ளது.

இவ் விழாவிற்குத் திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரியின் மேனாள் இணைப்பேராசிரியர் முனைவர் தி.நெடுஞ்செழியன் தலைமை தாங்குகிறார்.

திருச்சி அன்பில் தர்மலிங்கம் வேளாண்மை கல்லூரி மேனாள் முதல்வர் முனைவர் கு.கதிரேசன் மற்றும் தந்தை பெரியார் அரசுக் கலைக் கல்லூரியின் மேனாள் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் க.செயலாபதி முன்னிலை வகிக்கின்றனர்.

முத்தமிழ்ச் சங்கத்தின் நிறுவுநர் திருவெறும்பூர் முக்குலத்தோர் மேனிலைப்பள்ளி மேனாள் தலைமையாசிரியர் செ.சக்திவேல் வரவேற்புரையாற்றுகின்றார்.

இவ் விழாவில் பாரதியார் குறித்த பேச்சுப்போட்டியும் கவிதைப் போட்டியும் நடைபெறுகின்றது.

இப் பேச்சுப் போட்டிக்குத் தமிழ்நாடு முழுவதிலிருந்தும் 60 கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் கலந்துகொள்கிறார்கள்.

போட்டிகளின் நடுவர்களாக, திருச்சி கலைகாவிரி நுண்கலைக் கல்லூரியின் தமிழ்த்துறைத் தலைவர் பேராசிரியர் ஆநிறைச்செல்வன், திருச்சி தூய வளனார் தன்னாட்சிக் கல்லூரித் தமிழ்ப் பேராசிரியர் அடைக்கலராஜ், திருச்சி பொன்னையா மேல்நிலைப்பள்ளி பட்ட மேற்படிப்பு ஆசிரியர் கவிஞர் பிரியதர்ஷினி ஆகியோர் கலந்துகொள்கிறார்கள்.

கவிஞர் தில்லை சண்முகம் நன்றி கூறுகின்றார். இவ் விழாவுக்கான ஏற்பாடுகளைத் திருச்சி முத்தமிழ்ச் சங்கப் பொறுப்பாளர்கள் செய்துவருகின்றனர்.

Leave A Reply

Your email address will not be published.