அங்குசம் செய்தி எதிரொலி ” வேகத்தடை அமைப்பு. புதிய தார்சாலை சீரமைப்பு.
துறையூர் தாலுகா அலுவலகம்
அங்குசம் செய்தி எதிரொலி ” துறையூர் தாலுகா அலுவலகம் எதிரில் வேகத்தடை அமைப்பு. புதிய தார்சாலை சீரமைப்பு.
திருச்சி மாவட்டம் துறையூரில் சாலை சீரமைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது எனவும் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டும் எனவும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து இருந்ததை நமது அங்குசம் இணையதளத்தில், “சாலைப் பணியில் தாமதம்: விபத்து ஏற்படும் அபாயம் ,என்ற தலைப்பில் கடந்த 21 ஆம் தேதி செய்தி வெளியானது.
வெட்டவெளியில் சிறுநீர் ! வழிந்தோடும் கழிவு நீர் ! கண்டுகொள்ளாத நகராட்சி ! –
செய்தி வெளியானதைத் தொடர்ந்து நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் துறையூர் பாலக்கரை முதல் முசிறி பிரிவு ரோடு வரையிலான புதிய தார்ச்சாலை அமைத்தும் பொதுமக்கள் அதிகளவில் வந்து செல்லக்கூடிய காவல் நிலையம் அருகில் உள்ள வட்டாட்சியர் அலுவலக வளாகத்திற்குள் சார்பதிவாளர் அலுவலகம், வனத்துறை, கருவூலம், பழங்குடியினர் நலம், பொதுப்பணித்துறை உள்ளிட்ட அரசு அலுவலகங்கள் ஒன்று சேர உள்ள இடத்திற்கு எதிராக வேகத்தடை அமைக்க வேண்டும் என நாம் அந்த செய்தியில் குறிப்பிட்டு இருந்தோம்.

அதனைத் தொடர்ந்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், முசிறி பிரிவு ரோடு முதல் பாலக்கரை வரையில் இருபுறமும் புதிய தார்ச்சாலை அமைத்தும் ,காவல் நிலையம் அருகிலும், தாலுகா அலுவலகம் எதிரிலும் சாலையின் இருபுறங்களிலும் வேகத்தடை அமைத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்துள்ளனர்.
அதிகாரிகளுக்கு அங்குசம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் ,செய்தியை வெளியிட்ட அங்குசம் இதழுக்கு சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களும் தங்களது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
– அருண் – செய்தியாளர்








Comments are closed, but trackbacks and pingbacks are open.