அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

வெட்டவெளியில் சிறுநீர் ! வழிந்தோடும் கழிவு நீர் ! கண்டுகொள்ளாத நகராட்சி !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

துறையூர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருபுறமும் வழிந்தோடும் சாக்கடை கழிவு நீர் மற்றும் பேருந்து நிலையத்திற்கு வரும் பயணிகள் வெட்டவெளியில் கழிக்கும் சிறுநீர் வழிநெடுக  தேங்கி நின்று கடும் துர்நாற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் நோய்த்தொற்று ஏற்படக்கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது.

கடந்த சில வருடங்களுக்கு முன்பு பேருந்து நிலையத்தில் பயணிகள் குறிப்பாக ஆண்கள் வெட்டவெளியில் சிறுநீர் கழிப்பதை தடுப்பதற்காக , துறையூர் நகராட்சி சார்பில் பேருந்து நிலைய வலதுபுறம் ஓரத்தில் பூச்செடிகள் வைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்தது. அதனை சுகாதார அதிகாரிகளும் அவ்வப்போது மேற்பார்வையிட்டு வந்தனர். இதன் காரணமாக பேருந்து நிலையத்தில் வெட்டவெளியில் சிறுநீர் கழிப்பது தடுக்கப்பட்டது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

2026 June 11 - 17 Angusam Book

துறையூர் அண்ணா பேருந்து நிலையம்தற்போது அதனையும் மீறி பூச்செடிகள் அருகிலேயே பொதுமக்கள் சிறுநீர் கழிப்பதை வழக்கமாக்கிவிட்டதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பேருந்து நிலையத்திற்குள் நுழைய முடியாதபடி துர்நாற்றம் வீசுகிறது. பயணிகள் குறிப்பாக பெண்கள் மூக்கைப் பிடித்தபடி பேருந்து நிலையத்திற்கு வருவதும், காத்திருக்கும் பேருந்திற்குள்ளும் இருக்கக்கூடிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

அருகிலிருக்கும் அம்மா உணவகத்தில் மக்கள் மூத்திர வாடையிலேயே உணவை உண்ணக்கூடிய அவலநிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். நகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் தினந்தோறும் ஆய்வு செய்வதே கிடையாது என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

துறையூர் அண்ணா பேருந்து நிலையம்மேலும் பேருந்து நிலையத்தின் இருபுறமும் உள்ள கழிவு நீர் கால்வாய் தூர்வாரப்படாமல் கழிவு நீர் தேங்கி, வழிந்தோடுவதால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பேருந்து நிலையத்திற்கு வரும் அனைவரும் நோய்த்தொற்றுக்கு ஆளாகக் கூடிய அபாயமும் ஏற்பட்டுள்ளது. தற்போது தமிழகத்தின் ஒரு சிலப் பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், துறையூரில் முக்கிய பகுதியாக, அன்றாடம் நூற்றுக்கணக்கானோர் வந்து செல்லும் பேருந்து நிலையம் , நோய்த்தொற்றை இலவசமாக தரும் நிலையில் உள்ளது மிகவும் வேதனைக்குறிய விஷயமாக உள்ளதால், உடனடியாக நகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சுகாதார சீர்கேடு ஏற்படாவண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.