எண்ணங்களை சிதற விடாது முன்னேறுங்கள் ! விளையாட்டு உங்களுக்கான அடையாளத்தை தரும் !
திருச்சி துவாக்குடி அரசு கலைக் கல்லூரியில் 27.03.2025 அன்று விளையாட்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழகத்தின் மாநில தலைவர் ஆங்கிலத் துறையின் இணை பேராசிரியர் மற்றும் உடற்கல்வி துறையின் ஒருங்கிணைப்பாளருமான முனைவர் பி. டேவிட் லிவிங்ஸ்டன் வரவேற்புரை நிகழ்த்தினார்.

கல்லூரியின் முதல்வர் முனைவர் நா.ஆனந்தவல்லி தலைமை உரை ஆற்றினார். கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் ப. ஆனந்தன் விளையாட்டு துறையின் ஆண்டு அறிக்கையை வாசித்தார். விழாவில் சிறப்பு விருந்தினராக புதுக்கோட்டை மாமன்னர் அரசக் கல்லூரியில் உடற்கல்வி துறையின் இயக்குனர் முனைவர் இ . ஜான்பார்த்திபன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
பாரதிதாசன் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட கல்லூரிகளுக்கு இடையே நடைபெற்ற பல்வேறு ஓட்டப் பந்தயம் மற்றும் தடகள போட்டிகளில் கல்லூரியின் சார்பில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பல்வேறு மாணவ மாணவியருக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.

மாநில அளவில் நடைபெற்ற முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகளில் சிறப்பிடம் பெற்ற விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. சிறப்பு விருந்தினர் ஜான் பார்த்திபன் தன் சிறப்புறையில், டாக்டர் அப்துல் கலாமின் கனவு காணுங்கள் என்னும் பொன் மொழியை நினைவூட்டி குறிக்கோளை அடைவதற்கான வழிகளை கண்டறியுங்கள் என்றார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
எண்ணங்களை சிதற விடாது தடைகளை தகர்த்து வாழ்வில் முன்னேறுங்கள் விளையாட்டு உங்களுக்கான அடையாளத்தை தரும் உடல் வலிமையை தரும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் தவறான செயல்களை நோய்களை தடுக்கும் என்றார் கல்லூரியின் உளவியல் துறை தலைவர் வணிகவியல் துறை பேராசிரியர் மற்றும் விளையாட்டுக் குழு உறுப்பினர் முனைவர் வெ.செல்வராணி நன்றி உரை வழங்கினார்.