நள்ளிரவில் விழுந்த ஸ்ரீரங்கம் கோபுரம் சுவர் ! காரணம் இது தானா ?
பரபரப்புக்காக கோபுரமே இடிந்து விழுந்து விட்டதாக திட்டமிட்டு பொய்ச் செய்தியைப் பரப்புகிறார்கள்.
ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் மொத்தமாக 21 கோபுரங்கள் உள்ளன. இதில், ராஜகோபுரம் 236 அடி உயரம் கொண்டது. தமிழ் எழுத்துக்களின் எண்ணிக்கை அடிப்படையில் இந்த கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. 21 கோபுரங்களில் மற்றவை வண்ணமயமாய் காட்சி அளிக்க, ஒன்று மட்டும் வெள்ளை நிறத்தில் இருக்கிறது.
ஸ்ரீரங்கம் அரங்கநாதன் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் உள்ள கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் மேற்கூரை பூச்சுகளும் அதனை தாங்கி நிற்கும் தூண்களும் இடிந்து விழும் நிலையில் இருந்தது
இதனிடையே, இதனையடுத்து நள்ளிரவில் இரண்டு மணியளவில் அரங்கநாதன் கோயிலின் கிழக்கு நுழைவு வாயிலில் மேற்கூரை பகுதி சேதமடைந்த கோபுரத்தின் இரண்டு நிலைகளிலும் உள்ள பூச்சுகள் அதிகாலை 1.05க்கு இடிந்து விழுந்தது.
அதே நேரம் கீழ அடையவளஞ்சான் முனீஸ்வரன் கோயில் திருவிழாவில் பலத்த விமர்சையாக சணல்சுற்றப்பட்டவெடி, பிரமாண்டமான பேண்டு செட்டு பெரிய ஊர்வலமே நடந்து சென்று இருக்கிறது. இராஜகோபுரம் அருகில் கோவிலை சுற்றி 40 மீட்டருக்கு வானவேடிக்கை நடத்த அனுமதி இல்லை தடைசெய்யப்பட்டுள்ளது என்கிற போர்டு வைக்கப்பட்டுள்து. இதே போர்டு 21 கோபுரங்கள் அருகில் வைக்க வேண்டும் என்பதே ஸ்ரீரங்க மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கோபுரங்கள் சீரமைக்கும் பணிகளுக்கு ரூ. 67 லட்சம் மதிப்பீட்டில் திட்ட அறிக்கை தயார் செய்யபட்டுள்ளது. இந்த பணிக்கு அந்த பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 98 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இன்று முதல் சாரம் கட்டும் பணி துவங்கி, இன்னும் ஒருசில நாட்களில் கோவில் நிர்வாகத்திடம் உள்ள பணத்தில் விரைவில் சீரமைப்பு பணிகள் நடைபெறும். இவ்வாறு கோவில் நிர்வாகம் விளக்கம் அளித்தது.
சுவர் இடிந்தற்கான காரணம் குறித்து போலிஸ் விசாரணை செய்து கொண்டு இருக்கிறது. முழுமையான விசாரணை முடிந்த பிறகே சுவர் இடிந்து விழுந்ததற்கான காரணம் தெரியவரும் என்கின்றனர்.