திருச்சியில் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு – திருச்சியில் நாளை 06.08.2023 மருத்துவமுகாம் !
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு திருச்சி தெற்கு மாவட்டதி.மு.க மருத்துவர் அணி மற்றும் அப்பல்லோ மருத்துவமனை இணைந்து நடத்தும் இலவச மருத்துவ முகாம் ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை திருச்சி சத்திரம் பேருந்து நிலையம், இந்திரா காந்தி கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மருத்துவ அணி மாநில செயலாளர் எழிலன் நாகநாதன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று இந்த மருத்துவ முகாமினை தொடங்கி வைக்கின்றனர். திருச்சி தெற்கு மாவட்ட திமுக மருத்துவர் அணி மாவட்ட தலைவர் டாக்டர் தமிழரசன், மாவட்ட அமைப்பாளர் டாக்டர் சுரேஷ் பாபு, டாக்டர்கள் பால்வண்ணன், முகமது மன்சூர் ,சந்தோஷ் குமார் உள்ளிட்ட நிர்வாகிகள் ஏற்பாட்டில் நடைபெறுகிறது.
இந்த மருத்துவ முகாமில் திருச்சி அப்பல்லோ மருத்துவமனையின் பொது மருத்துவர், நுரையீரல், இருதய நோய், சர்க்கரை நோய் ,சிறுநீரக நோய் ,எழும்பியல், குழந்தைகள் நலம், காது, மூக்கு, தொண்டை உள்ளிட்ட 15 வகையான மருத்துவ நிபுணர்கள் மற்றும் 60 மருத்துவ பணியாளர்கள் என மிகவும் விரிவாக மருத்துவ ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
முகாமில் ரத்த அழுத்தம், ரத்த சர்க்கரை அளவு, ஹீமோகுளோபின் ரத்த அளவு சரிபார்த்தல், இ.சி.ஜி ,எக்கோ கார்டியோ கிராம் ,நுரையீரல் PFT சோதனை , LIVER FIBRO Scan ,Bone Mineral Dencity உள்ளிட்ட பல்வேறு வகையான பரிசோதனைகள் மற்றும் மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்படுகிறது. இம்முகாமில் பொதுமக்கள் பங்கேற்று பயனடையுமாறு மருத்துவர் அணி நிர்வாகிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.