ஆட்டு உடல் உறுப்புகளில் மந்திரீகம் செய்து பணம் இரட்டிப்பு மோசடி – 4 பேர் கைது !

0

ஆட்டு உடல் உறுப்புகளில் மந்திரீகம் செய்து பணம் இரட்டிப்பு மோசடி – 4 பேர்  பேர் கைது !

500 ரூபாய்க்கு ஆட்டு உடல் உறுப்புகளை வாங்கி உத்தமபாளையத்தில் மாந்திரீக பூஜை செய்து பணம் இரட்டிப்பு செய்து தருவதாக கூறி இரண்டரை லட்சம் ரூபாய் மோசடி. 4 பேரை கைது செய்து போலீஸார் விசாரணை.

2 dhanalakshmi joseph

தேனி மாவட்டம், உத்தமபாளையத்தில் மாந்திரீகம் செய்து பணம் இரட்டிப்பு செய்வதாக கூறி இரண்டரை லட்சம் கொடுத்தால் 5 லட்சம் ரூபாய் தருவதாக மோசடி செய்த நான்கு பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்தமபாளையத்தில் உள்ள ஆட்டுக்கறி கடையில் ஆட்டு உடல் உறுப்புகள் நாக்கு, மூளை, நுரையீரல், உள்ளிட்ட உடல் உறுப்புகளை 500 ரூபாய் கொடுத்து  ஜேம்ஸ் என்பவர் வாங்கி உள்ளார்.

- Advertisement -

- Advertisement -

இந்த உடல் உறுப்புகளை ஜேம்ஸ் என்பவர் மோசடியாக இரண்டரை லட்சம் ரூபாய் பணத்தை பாபா பக்ரூதீன் மற்றும் பாண்டி ஆகிய இருவரிடம் கொடுத்து பிரஸ் ஸ்டிக்கர் ஒட்டிய இரண்டு சக்கர வாகனத்தில் கொடுத்து கேரளா சேர்ந்த செல்லப்பா என்பவரிடம் கொடுத்தனர்.

ஆட்டு உடல் உறுப்புகளில் மாந்திரீகம் 4 பேர் கைது
ஆட்டு உடல் உறுப்புகளில் மாந்திரீகம் 4 பேர் கைது

மோசடியாக வாங்கிய இரண்டரை லட்சம் ரூபாய்யில், ஒரு லட்சம் ரூபாயை கேரளாவை சேர்ந்த செல்லப்பா எடுத்துக்கொண்டு மீண்டும் ஒன்றை லட்சம் ரூபாயை ஜேம்ஸ்யிடம் கொடுத்து விடும் படி திருப்பி கொடுத்து அனுப்பி விட்டார்.

பின்னர் ஆட்டு உடல் உறுப்புகளை  மதுரை, வாடிபட்டி, அய்யனார் கோட்டையை சேர்ந்த அலெக்ஸ்பாண்டி(39), கமுதியை சேர்ந்த டேவிட் பிரதாப் சிங் (40),  மற்றும், பசுமபொன் கிராமத்தை சேர்ந்த முருகன் (65) ஆகிய மூன்று பேரிடம் கொடுத்து இந்த சூட்கேஸை திறந்து பார்க்க கூடாது என கொடுத்து அனுப்பி விட்டனர்.

இந்த ஆட்டு உடல் உறுப்புகளை கேரளாவில் இருந்து கார்பியோ காரில் வைத்து உத்தமபாளையம் வந்தனர். அப்போது உத்தமபாளையம் ஏ.எஸ். பி. மது குமாரி தலைமையில் நேற்று முன்தினம் நள்ளிரவு உத்தமபாளையம் பைபாஸ் சாலையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

4 bismi svs

அப்போது சந்தேகப்படும்படியாக வந்த கார் ஒன்றை நிறுத்தி சோதனை செய்தபோது காரில் அமர்ந்திருந்த சிலர் முரண்பட்ட தகவல்களை தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து இவர்கள்கொண்டு வந்த உடமைகள் சோதனை இடப்பட்டன.

அதில் டிராவல்ஸ் பேக் மற்றும் பூஜை செய்யப்பட உள்ள எறுமிச்சை, சூடம், முட்டை போன்றவை இருந்துள்ளது.

இதனை அடுத்து இவர்கள் கொண்டு வந்த பேக்குகள் திறந்து பார்க்கப்பட்டன. இதில் போலீஸாரே அதிர்ச்சி அடைந்தனர்.  நாக்கு  கல்லீரல், மூளை,  உள்ளிட்ட உறுப்புகள் இருந்தன..’ இதனை கண்ட போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர்.

உடல் உறுப்பு கொண்டு வந்த கார்
உடல் உறுப்பு கொண்டு வந்த கார்

இவை அனைத்தையும்  காருடன்  உடனடியாக போலீசார் உத்தமபாளையம் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர் அங்கு தொடர்ந்து விசாரணை நடைபெற்றது.  உத்தமபாளையம் பாறைமேடு தெருவை சேர்ந்த மந்திரவாதி ஜேம்ஸ் (52) என்பவர் தொடர்பில் இருந்துள்ளார்.

ஜேம்ஸ் மீது ஏற்கனவே பணத்தை இரட்டிப்பு செய்வதாக கூறி மோசடியில் ஈடுபட்ட வழக்குகள் உள்ளன.  காரில் வந்த 3 பேரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில்:

“உத்தமபாளையம் மந்திரவாதி ஜேம்ஸ் தங்களுக்கு அறிமுகமாகி, நள்ளிரவில் பூஜை செய்தால் பணம் கொட்டோ, கொடடோன்று கொட்டும் என்றும், ஒரே இரவில் பணக்காரராக மாறிவிடலாம் என்று கூறி, கேரளா மாநிலம் வண்டிப் பெரியாறில் உள்ள நபர் ஒருவரிடம் பணம் தரவேண்டும் என்று கூறியதாகவும் இதன் அடிப்படையில் இரண்டரை லட்சம் ரூபாய் அங்கு தந்ததாகவும் வண்டிப் பெரியாறில் உள்ள நபர் சூட்கேஸ் தந்ததாகவும்,  இதனை திறக்காமல் மந்திரவாதி  ஜேம்ஸிடம் தர வேண்டும் என கூறி உள்ளார்.

அதன் அடிப்படையில் பாளையம் வந்ததாக கூறி உள்ளனர். மூன்று பேரில் அலெக்ஸ் பாண்டியன்| இரண்டரை லட்சம் ரூபாய் தந்ததாக கூறி உள்ளதால், எவ்வளவு பணத்தை இழந்தனர். என்பதில் குழப்பம் நீடிக்கிறது. போலீஸார் விசாரணையில் ரூ.பல லட்சம் மோசடி நடந்துள்ளதால் விசாரணை நீடிக்கிறது.

தடயவியல் சோதனையில் 500 ரூபாய்க்கு வாங்கிய ஆட்டு உடல் உறுப்புகள் என கண்டறியப்பட்டுள்ளது. உத்தமபாளையம் போலீசார் மந்திரவாதி ஜேம்ஸ் குற்றாலத்தில் வைத்து கைது செய்தனர்.

மேலும் உத்தமபாளையம் சேர்ந்த பாபா பக்ரூதீன், பாண்டி,  கேரளாவை சேர்ந்த செல்லப்பா உள்ளிட்ட நான்கு பேரை கைது செய்து உத்தமபாளையம் இன்ஸ்பெக்டர் சிலைமணி தலைமையில் தனிப்படையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.