சிதிலமடைந்த கோயில்களை புனரமைத்து குடமுழுக்கு நடத்த தமிழக அரசுக்கு கோரிக்கை

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சிதிலமடைந்த கோயில்களை
புனரமைத்து குடமுழுக்கு நடத்த
தமிழக அரசுக்கு கோரிக்கை

சிதிலமடைந்த சைவ, வைணவ கோயில்களைக் கண்டறிந்து புனரமைத்து குடமுழுக்கு நடத்த வேண்டும் என தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு தமிழக அரசை வலியுறுத்தியுள்ளது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

இக் கோரிக்கையை வலியுறுத்தி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பின் சார்பில் தஞ்சையில் சனிக்கிழமை நடைபெற்ற மாவட்ட ஆன்மீக மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

கூட்டமைப்பின் மாநில முதன்மைச் செயலாளர் புலவர் ஆதி.நெடுஞ்செழியன் தலைமையில் நடைபெற்ற இம் மாநாட்டில் தேசிய பொதுச் செயலாளர் வழக்கறிஞர் சந்திரபோஸ், தேசிய துணைத் தலைவர் டாக்டர் பழனிக்குமார், தமிழ்நாடு-பாண்டிச்சேரி முஸ்லிம் ராஷ்டிரிய மன்ஞ் ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஷாகுல் ஹமீது ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

முன்னதாக, மாநில துணைத் தலைவர் துரை.கோவிந்தராஜன் வரவேற்றார். வடக்கு மாவட்ட தலைவர் ராஜா சுப்பிரமணியன் முன்னிலை வகித்தார்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

இம் மாநாட்டில், தமிழ்நாட்டில் சைவ, வைணவ ஆதீனங்களின் வழிகாட்டுதல்படி தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பை விரிவுபடுத்தி வளர்க்க வேண்டும்.

சிதிலமடைந்து இடிபாடுகளுடன் உள்ள சைவ, வைணவ கோவில்களைக் கண்டறிந்து புனரமைப்பு செய்து குடமுழுக்கு நடத்த வேண்டும்.

மதுரை மீனாட்சி அம்மன், திருச்செந்தூர் சுப்ரமணியர், பழனி தண்டாயுதபானி ஆகிய கோயில்களை சுயாட்சிபெற்ற கோயில்களாக மாற்ற வேண்டும்.

கிராம கோவில் ஒன்றை அரசு அமைத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் துரை.திருஞானம், கிராம கோயில் திருப்பணி செம்மல் யுவராஜ் அமிழ்தன், தாணிகோட்டகம் ராமலிங்கம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

முடிவில், தேசிய திருக்கோயில்கள் கூட்டமைப்பு மையக்குழு உறுப்பினர் காசிராஜன் நன்றி கூறினார்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.