கல்லூரியில் சேர எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும் நரிக்குறவர் மாணவர் மனு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

சேலத்தில் பிளஸ் 2 தேர்ச்சி பெற்று கல்லூரியில் மாணவர் சேர்க்கை பெறுவதற்காக எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்க கோரி, நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர் ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மனு அளித்தார்.

சேலம் குகை நரிக்குறவர் காலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு. இவரது மகன் நந்தகுமார். பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வில் 449 மதிப்பெண் பெற்றுள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள நரிக்குறவர் வகுப்பு மாணவர்களில் இவரே அதிக மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற்ற மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

இந்தநிலையில்  நந்தகுமார் ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று காலை தனது மாமன் மற்றும் தாய் நதியாவுடன் வந்தார். பின்னர், உயர்கல்வி பயிலும் வகையில் இந்து நரிக்குறவர் (எஸ்.டி.) ஜாதி சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்குமாறு  வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

இதுகுறித்து நந்தகுமார் கூறுகையில், சேலம் கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வில் 449 மதிப்பெண்கள் பெற்றுள்ளேன்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தற்போது கல்லூரியில் உயர்கல்வி படிப்பில் மாணவர் சேர்க்கை பெறுவதற்கு இந்து நரிக்குறவர் (எஸ்.டி.) ஜாதி சான்றிதழ் வேண்டும். எனவே அவசர அவசியம் கருதி எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்க ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும். எங்களது பஞ்சம் தாங்கி ஏரி பகுதியில் என்னைப் போல் உள்ள நூற்றுக்கணக்கான நரிக்குறவர் இனத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு அவசர அவசியம் கருதி எஸ்.டி. ஜாதி சான்றிதழ் வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.