சேலத்தில் களைகட்டிய எடப்பாடியார் பிறந்தநாள் கொண்டாட்டம்!
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்றையதினம் தனது 69 வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்த நிலையில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவிப்பதற்காக சேலம் நெடுஞ்சாலைநகரில் அதிமுக கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் தமிழகம் முழுவதிலும் இருந்து படையெடுத்து வருகின்றனர். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இல்லமிருக்கும் சேலம் நெடுஞ்சாலை நகர் சாலையில் கூட்டம் அலைமோதுகிறது.
இதன்காரணமாக சேலம் நெடுஞ்சாலைநகர் முழுவதும் காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் சேலம் புறநகர் மாவட்டம் சார்பாக 69 கிலோ எடை கொண்ட கேக் ஏற்பாடு செய்திருந்தனர். இதேபோன்று சேலம் மேச்சேரி, ஓமலூர் ஆகிய ஒன்றிய செயலாளர்கள் தனித்தனியாக பிரமாண்டமான கேக்கினை ஏற்பாடு செய்திருந்தனர். இதையடுத்து அனைத்து கேக்குகளையும் ஒன்றாக இருபது அடி நீளத்திற்கு வைத்து மொத்தமாக 200 கிலோ கேக்கினை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடினார்.
அதிமுக அவை தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, கேபி.முனுசாமி, பெஞ்சமின், உள்ளிட்டர் வருகை தந்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இது மட்டுமில்லாமல் அண்ணா சங்கத்தை சேர்ந்தவர்கள் கூலித் தொழிலாளர்கள் என ஏராளமான வருகை தந்தனர்.
தமிழகம் முழுவதும் முன்னாள் அமைச்சர்கள் எம்எல்ஏக்கள், அதிமுக மாவட்ட செயலாளர்கள் என ஆயிரக்கணக்கான குவிந்து வருவதால் சேலம் நெடுஞ்சாலை நகர் திருவிழா கோலம் பூண்டு உள்ளது.
-சோழன் தேவ்