ஸ்டாலினின் அமெரிக்க பயணம் ? தமிழகத்தில் அடுத்த அரசியல் நகர்வு!
தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலின் மே மாதம் 7ஆம் தேதி பதவியேற்றார். மு.க.ஸ்டாலின் பதவியேற்றது முதலே கொரோனா பேரிடரை சிறப்பாக எதிர்கொண்டு தமிழ்நாட்டில் இரண்டாவது அலை குறைய முக்கிய பங்காற்றினார்.
அதோடு மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற சமயம் தமிழ்நாடு நிதி நிலை என்பது மிகவும் மோசமானதாக இருந்தது. தமிழக பட்ஜெட்டில் கையிருப்பு என்ற பேச்சுக்கே இடமில்லாத நிலையில், முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நன்கொடையை பெற்று அதன் மூலம் பல்வேறு திட்டங்களை நடைமுறைப் படுத்தினார். இப்படி ஆட்சி பொறுப்பேற்றது முதலே தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் பல்வேறு திட்டங்கள் என்று 2 மாதத்தில் தமிழகத்தின் பல பகுதிகளுக்கு பயணம் மேற்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் மு க ஸ்டாலின் தனது உடல்நிலை கவனிப்பதாற்காகவும், மருத்துவ நடைமுறை களுக்காகவும் அமெரிக்கா செல்ல திட்டமிட்டு இருக்கிறாராம்.
மு க ஸ்டாலின் அமெரிக்கா செல்லும் போது தமிழ்நாட்டில் ஆட்சி பணியையும் கட்சிப் பணியில் கவனித்துக்கொள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட உள்ளதாம். அந்த நேரத்தில் முதலமைச்சரின் இலாகாக்களை சிறப்பு பொறுப்பாக மூத்த அமைச்சர் களுக்கு பிரித்துக் கொடுக்க திட்டமிட்டிருக்கிறார்களாம்.
இப்படி முதலமைச்சரின் அமெரிக்க சுற்றுப்பயணம் விரைவில் திட்டமிடப்பட்டிருக்கிறது. சட்டமன்ற கூட்டத்தொடர் முடிந்த பிறகு செல்லும் முதல்வர் குறைந்தது ஒரு மாதமாவது அமெரிக்காவில் இருப்பார் என்று கூறப்படுகிறது.