திருச்சி பிரபல வழக்கறிஞர் கார் தீ விபத்து ஒருவர் பலி!..
திருச்சி பிரபல வழக்கறிஞர் கார் தீ விபத்து ஒருவர் பலி!..
திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம் இரூர் அருகே உள்ள காரை பிரிவு பாதையில் லாடபுரம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி(57) என்பவர் இருசக்கர வாகனத்தில் தேசிய நெடுஞ்சாலையை சாலையை கடக்க முயற்சி செய்துள்ளார்…..
அப்பொழுது சென்னையில் இருந்து திருச்சி நோக்கி சென்ற காரில் மோதி விபத்துக்குள்ளாகியது. இதில் இரு வாகனங்களும் திடீரென தீப்பிடித்து மளமளவென எரிய தொடங்கியது..
இந்த விபத்தில் பெரியசாமிக்கு பலத்த காயம் ஏற்பட்டதோடு பெரியசாமியுடன் இருசக்கர வாகனத்தில் வந்த அவரது பேரக்குழந்தைகள் அஜய்(7), பரணி(4) ஆகிய இரண்டு சிறுவர்களுக்கும் பாதி உடல் தீக்காயம் (50%) ஏற்பட்டுள்ளது..
மேலும் காரில் பயணம் செய்த திருச்சியை சேர்ந்த பிரபல வழக்கறிஞர் புனிதன்(57) அவரது காரின் ஓட்டுநர் இளம்பரிதி(50) உள்ளிட்ட மூவரும் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினர்…
இந்த விபத்தில் இரு சக்கர வாகனமும் காரும் முழுவதுமாக தீப்பிடித்து எரிந்து விட்ட நிலையில் சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்…
விபத்தில் காயமடைந்தவர்கள் பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட நிலையில், பெரியசாமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார், மேலும் சிறுவர்கள் அஜய் மற்றும் பரணி ஆகிய இருவரும் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
–இந்தர்ஜித்