உதயநிதி ஸ்டாலினுக்காக சபரீசன் போடும் ஸ்கெட்ச்!

0

திமுக தற்போது தமிழ்நாட்டில் ஆட்சிப் பொறுப்பில் உள்ளது. ஆனாலும் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் கொங்கு மண்டலமும், மேற்கு மண்டலம் திமுகவின் கனவை சிதைத்தது.

ஆனாலும் திமுக தமிழகத்தில் தனிப் பெரும்பான்மையோடு தான் ஆட்சியில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மு க ஸ்டாலின் கட்சியை பலப்படுத்த வேண்டும். 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலிலும் திமுக தான் வெற்றி பெற வேண்டும். எப்போதும் திமுக மிகப்பெரிய அரசியல் இயக்கமாக தமிழ்நாட்டில் இருக்க வேண்டும் என்று முனைப்போடு செயல்பட்டு வருகிறார்.
அதனால் கட்சிக்குள்ளும் மிகப் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி இருக்கிறார். அதோடு ஆட்சியிலும் நேரடித் தன்மை, அதிகாரிகள் தேர்வு, அமைச்சர்கள் கண்டிப்பு என்று காரர் காட்டி வருகிறார்.

ஸ்ரீ சத்யா புரோமோட்டர்ஸ்

இப்படி வருங்காலத்தை எண்ணி தொலைநோக்குப் பார்வையோடு செயல்பட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின். அதே நேரம் உதயநிதியும் மாநிலம் முழுவதும் தனது செல்வாக்கை அதிகப்படுத்திக் கொண்டே இருக்கிறார்.

4 bismi svs

மேலும் சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் எம்எல்ஏவாக திறம்பட செயலாற்றி, தன்னுடைய செயல்பாடுகளை மாநிலம் முழுவதும் மார்க்கெட்டிங் செய்துள்ளார். இப்படி திமுகவின் வருங்காலத்தை உதயநிதியின் தலைமையில் அமைப்பதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

- Advertisement -

இதே சமயம் திமுகவின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கான அனைத்து திட்டங்களையும் வகுத்து, திமுக தலைமை இப்பொழுதே அதை செயல்படுத்த தொடங்கிவிட்டது.
இதன் ஒரு பகுதியாக திமுகவில் இளைஞர்களின் ஓட்டுகளை பெறுவதற்கான நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறது. அதோடு இளைஞர்களை திமுகவின் பக்கம் இழுத்து வருவது, அதற்காக திமுகவின் இளைஞர் அணி யையும், திமுகவின் மாணவர் அணி யையும் வலுப்படுத்துவது போன்ற அசைன்மென்ட்களை உதயநிதி முன்னின்று நடத்த உள்ளாராம்.

இவை அனைத்தும் ஒரு புறம் இருக்க பல புதிய கட்சிகளின் தோற்றம், பாரம்பரிய வரலாறு கொண்ட கட்சிகளின் சரிவு போன்றவையெல்லாம் கவனித்த திமுக. வருங்காலத்திலும் திமுகவின் பலம் குறையாமல் தமிழகத்தின் மிகப்பெரிய ஆளுமை கட்சியாக, ஆளும் கட்சியாகவும் இருக்க வேண்டும். அதற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் திமுகவை கொண்டு செல்ல வேண்டும். மேலும் நாளைய தலைமுறைகளான மாணவர்களை திமுகவின் பக்கம் அதிகம் அழைக்க வேண்டும். முதல் தலைமுறை வாக்காளர்களின் ஓட்டுக்களைப் பெறக் கூடிய கட்சியாக திமுக இருக்க வேண்டும். போன்ற பல்வேறு திட்டங்கள் செயல்படுத்த திமுக தலைமை சபரீசன் மற்றும் சர்வே டீம் இடம் இந்த பணியை கொடுத்துள்ளதாம்.
இந்த டீம் திமுகவின் வருங்காலத்தை கருத்தில்கொண்டு தமிழகத்தின் பட்டி தொட்டி எங்கும் ஸ்டாலின் போட்டோவை ப்ரொபைல் ஆக வைத்துக் கொண்டு பணியாற்ற உள்ளார்களாம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.