முத்திரை கட்டண ஊழல்! திருப்பத்தூர் பத்திர பதிவாளர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை !

0

முத்திரை கட்டணத்தை குறைவாக வசூலித்து  1.34 கோடி அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதாக மாவட்ட பத்திர பதிவாளர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

சென்னை மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியைச் சேர்ந்தவர் “செந்தூர் பாண்டியன்”  சில ஆண்டுகளுக்கு முன்பு ‘செங்கல்பட்டு மாவட்டத்தில்”  சார் பதிவாளராக பணியாற்றியபோது  முத்திரை கட்டணம் குறைவாக பதிவு செய்து அரசுக்கு ரூ.1.34 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக புகார் எழுந்தது.

சார் பதிவாளர் செந்தூர் பாண்டியன்இது குறித்து காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்த நிலையில்,  செங்கல்பட்டு மாவட்டம் மதுரவாயல் அடுத்த நூம்பல் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு “இன்று காலை”  திடிரென்று காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் டிஎஸ்பி கலைச்செல்வன், இன்ஸ்பெக்டர் கீதா தலைமையில் 5 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீஸார்கள்   6 மணி நேரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

மேலும் அவரது வீட்டில் இருந்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி  செந்தூர் பாண்டியனிடம் விசாரித்து வருவதால் அங்கு  பரபரப்பான சூழ்நிலை நிழவி வருகிறது.

தங்க மயில் - Akshaya Tritiya Specials at Thangamayil | Golden Offers | Thangamayil Jewellery Limited

செந்தூர் பாண்டியன் வீடு
செந்தூர் பாண்டியன் வீடு

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

“செந்தூரப் பாண்டியன்” தற்போது திருப்பத்தூர் மாவட்ட பதிவாளராக பணியாற்றி வருகிறார்.

கடந்த ஆண்டு ஜூன் மாதம் திருப்பத்தூர் வாணியம்பாடி ஜோலார்பேட்டை ஆம்பூர் போன்ற சார் பதிவாளர் அலுவலகங்களில் போலி பத்திரங்கள் அடுத்தடுத்து கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் ஆய்விற்கு வந்த மாவட்ட பதிவாளர் செந்தூர் பாண்டியன்.

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இடைத்தரகர்கள் கட்டுப்பாட்டில் வாணியம்பாடி உள்ளிட்ட சார் பதிவாளர் அலுவலகங்கள் உள்ளதாக செய்தியாளர்களிடம் கூறியது அதிர்ச்சியும் ஆச்சரியத்தையும் ஏற்படுத்தி இருந்ததை “அங்குசம் செய்தி”  வெளியிட்டு விவாதத்தை கிளப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

 

—  மணிகண்டன்.

Leave A Reply

Your email address will not be published.