நூற்றாண்டு மின்சார ரயில் சேவையை பாராட்டி மதுரையில் நடை பயணம்….

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்தியாவில் முதன்முதலாக மின்சார ரயில் சேவை  மும்பை விக்டோரியா டெர்மினஸ் மற்றும் குர்லா ரயில் நிலையம் இடையே 1925 ஆம் ஆண்டு பிப்ரவரி மூன்றாம் தேதி துவக்கி வைக்கப்பட்டது. மின்சார ரயில் மூலம் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டது மட்டுமில்லாமல் சுற்றுச்சூழலும் பாதுகாக்கப்பட்டது.

இந்தியாவில் உள்ள 66,504 கி.மீ. தூர ரயில் பாதைகளில் 97.05 சதவீதமான 64,545 கி.மீ தூர ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. தெற்கு ரயில்வேயில் உள்ள 5,040 கி.மீ. தூர ரயில் பாதைகளில் 95.21 சதவீதமான 4,799 கி.மீ தூர ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது.

இனிய ரமலான் வாழ்த்துகள்

மின்சார ரயில் சேவை
மின்சார ரயில் சேவை

மதுரை கோட்டத்தில் உள்ள 1,322 கி.மீ. தூர ரயில் பாதைகளில் 94.77 சதவீதமான 1,252 கி.மீ தூர ரயில் பாதை மின்மயமாக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம் – ராமேஸ்வரம் ரயில் பாதையில் தற்போது மின்மயமாக்கல் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

இந்திய ரயில்வேயில் மின்சார ரயில் சேவை 100 ஆண்டுகள் கடந்ததை நினைவு கூறும் வகையில் இந்தியா முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. அதேபோல மதுரை ரயில்வே கோட்டம் சார்பாக மதுரையில் மின்சார ரயில் நூற்றாண்டு சேவையை பாராட்டி நினைவு கூறும் வகையில் நடைபயணம் மேற்கொள்ளப்பட்டது.

ரயில் சேவையை பாராட்டி நடை பயணம்....
ரயில் சேவையை பாராட்டி நடை பயணம்….

இந்த நடைப்பயணத்தை மதுரை கோட்ட ரயில்வே மேலாளர் சரத் ஸ்ரீவத்சவா கொடியசைத்து வைத்தார். இந்த நடைபயணம் கோட்ட அலுவலகத்தில் இருந்து தேனி மெயின் ரோடு,  ரயில் நிலைய மேற்கு நுழைவாயில், ரயில்வே காலனி பகுதிகள் வழியாக சென்று ஓடும் தொழிலாளர் ஒய்வு அறை அருகே நிறைவு பெற்றது.

நடைப்பயணத்தில் கூடுதல் கோட்ட ரயில்வே மேலாளர் ராவ்,  முதன்மை வேக சக்தி திட்ட மேலாளர் எம்.ஹரிகுமார், கோட்ட மின் பாதை பொறியாளர் ரோஹன், கோட்ட  மின்சார ரயில் பொறியாளர் அமல் செபாஸ்டியன் உட்பட ரயில்வே அதிகாரிகள், ரயில்வே ஊழியர்கள், ஓடும் தொழிலாளர்கள், ரயில்வே பாதுகாப்பு படை வீரர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

— ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.