வைகை எக்ஸ்பிரஸில் கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

பயணிகளின் வசதிக்காக மதுரை – சென்னை – மதுரை வைகை மற்றும் காரைக்குடி – சென்னை – காரைக்குடி பகல் நேர விரைவு ரயில்களில் கூடுதலாக ஒரு பொது பெட்டி இணைக்கப்பட உள்ளது.

மதுரை – சென்னை எழும்பூர் வைகை விரைவு ரயில் (12636) மற்றும் சென்னை எழும்பூர் – காரைக்குடி பல்லவன் விரைவு ரயில் (12605) ஆகியவற்றில் மே 11 முதல் கூடுதலாக ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி இணைக்கப்படும்.

இனிய ரமலான் வாழ்த்துகள்

கூடுதல் பொதுப்பெட்டி இணைப்பு

உங்கள் விளம்பரம் இலட்சக்கணக்கான வாசகர்களை சென்றடைய....

அதேபோல காரைக்குடி – சென்னை எழும்பூர் பல்லவன் விரைவு ரயில் (12606) மற்றும் சென்னை எழும்பூர்  – மதுரை வைகை விரைவு ரயில் (12635) ஆகியவற்றில் மே 12 முதல் ஒரு முன்பதிவில்லாத இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டி கூடுதலாக இணைக்கப்படும்.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதற்காக இந்த ரயில்களில் ஒரு முன்பதிவு இருக்கை வசதி பெட்டி குறைக்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து இந்த ரயில்கள் 3 குளிர்சாதன இருக்கை வசதி பெட்டிகள், 12 முன்பதிவுள்ள இரண்டாம் வகுப்பு இருக்கை வசதி பெட்டிகள், 4 இரண்டாம் வகுப்பு பொது இருக்கை வசதி பெட்டிகள், ஒரு மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டி மற்றும் ஒரு சரக்கு பெட்டியுடன் கூடிய ரயில் மேலாளர் பெட்டி ஆகியவற்றுடன் இயக்கப்படும் என ரயில்வே துறை அறிவிப்பு.

 

—   ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

Leave A Reply

Your email address will not be published.