பொதுமக்கள் பயன்பாட்டிற்கு விடப்படும் இரயில் நிலையங்களின் காலியிடங்கள் !!

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இரயில் கட்டணம் இல்லாத வருமானத்தை பெருக்கும் வகையில் சாத்தூர், பாளையங்கோட்டை, நாசரேத், மற்றும் போடிநாயக்கனூர் ரயில் நிலையங்களில் உள்ள அளவுக்கு அதிகமான காலியிடங்களை உரிய கட்டணத்துடன் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட மதுரை கோட்ட ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

சாத்தூர் ரயில் நிலையத்தில் 12,250 சதுர அடியும், பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் 15,070 சதுர அடியும், நாசரேத் ரயில் நிலையத்தில் 64,583 சதுர அடியும் போடிநாயக்கனூர் ரயில் நிலையத்தில் 1,614 சதுர அடியும் கொண்ட காலி இடங்கள் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட உள்ளது.

Sri Kumaran Mini HAll Trichy

ரயில் நிலையங்கள்
ரயில் நிலையங்கள்

இந்த காலியிடங்கள் ரயில் நிலைய நுழைவாயிலுக்கு முன்பாக உள்ள வெளி வளாக பகுதிகளாகும். இதில் திருமணம், பிறந்தநாள் கொண்டாட்டம், சிறிய குடும்ப விழாக்கள், தனி பயிற்சி கல்லூரி, பயிற்சி பள்ளிகள், விளையாட்டு பயிற்சி மையங்கள், யோகா, தியானம், நடைப்பயிற்சி, குறு ஓட்ட பயிற்சி, சிரிப்பு மன்றங்கள் போன்ற ஆரோக்கியம் சம்பந்தமான நிகழ்வுகள், போட்டிகள்,  பரிசளிப்பு விழாக்கள், பள்ளி ஆண்டு விழாக்கள், புத்தக மற்றும் ஓவிய கண்காட்சிகள் நடத்தலாம்.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Flats in Trichy for Sale

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இதற்காக விருப்ப மனுக்கள் கோரப்பட்டுள்ளன. இது சம்பந்தமாக மேலும் விவரங்கள் அறிய மதுரை கோட்ட  ரயில்வே அலுவலகத்தில் மார்ச் 14 அன்று காலை 11 மணிக்கு நேருக்கு நேர் சந்திப்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளலாம்.

இதில் கலந்துகொண்டு அந்த காலி இடத்தை பயன்படுத்த வேறு சில புதிய திட்டங்களையும், ஆலோசனைகளையும் தெரிவிக்கலாம். விருப்ப மனுக்களை srdcm@mdu.railnet.gov.in என்ற இணையதள முகவரிக்கு அனுப்பலாம். இது சம்பந்தமாக மேலும் விபரங்கள் அறிய 9003862967 இந்த அலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

 

—   ஷாகுல், படங்கள்: ஆனந்தன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.