மதுரையில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை !

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

மதுரையில் திருட்டு மற்றும் வழிப்பறியில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை !

 

மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் மதுரை மாவட்டத்தில் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் திருட்டு, வழிப்பறி போன்ற குற்ற செயலில் ஈடுபடுபவர்களை கண்டறிந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள தனிப்படைகள் அமைக்கப்பட்டு, தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitche

இந்நிலையில் கடந்த 16.12.2022 ம் தேதி மதுரை மாவட்டம், உசிலம்பட்டி உட்கோட்டம், செக்காணூரணி காவல் நிலையத்தில் 2 இருசக்கர வாகனங்கள் திருடு போனது சம்மந்தமாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. மேற்படி வழக்குகளின் புலன் விசாரணையில் CCTV காட்சிகளை ஆய்வு செய்தபோது மன்னார்குடியிலிருந்து TN 45 BE 2727 என்ற Bolerco காரில் வந்த எதிரிகள் மேற்படி இருசக்கர வாகனங்களை திருடி சென்றுள்ள விபரம் தெரியவந்தது.

நேற்று 27.12.2022 ம் தேதி மேற்படி திருட்டு வழக்குகளில் ஈடுபட்ட நபர்களான 1) ஆகாஷ் @ துணைவன் வயது 21, த/பெ வெங்கடேசன், நெடுவாகோட்டை, மன்னார்குடி, திருவாரூர் மாவட்டம் மற்றும் 2) சுபாஷ் வயது 25, த/பெ சுப்பிரமணி, ராஜகிரி, பாபநாசம், தஞ்சாவூர் மாவட்டம் ஆகியோர் செக்காணூரணி காவல் ஆய்வாளர் தலைமையிலான தனிப்படையினரால் கைது செய்யப்பட்டு மேற்படி வழக்குகளில் திருடுபோன TN 58 AW 4757 Royal Enfield, TN 58 As 8854 Yamaha R15 ஆகிய 2 இருசக்கர வாகனங்கள் மற்றும் அவர்கள் திருட்டுச் சம்பவத்திற்கு பயன்படுத்திய TN 45 BE 2727 என்ற Bolereo கார் ஆகியவை பறிமுதல்

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

செய்யபட்டுள்ளது, இன்று 28.12.2022-ம் தேதி மேற்படி வழக்கில் கைது செய்யப்பட்ட இரண்டு குற்றவாளிகளும் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்பட்டனர். மேலும், இவ்வழக்கின் தலைமறைவு குற்றவாளிகளை கைது செய்ய தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்படி திருட்டு வழக்குகளில் விரைவாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை கைது செய்து வாகனங்களை பறிமுதல் செய்த செக்காணூரணி காவல் நிலைய தனிப்படை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களை காவல் கண்காணிப்பாளர் அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

மேலும், மதுரை மாவட்டத்தில் திருட்டு குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், தொடந்து திருட்டு சம்பவங்களில் ஈடுபடுவர்கள் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.சிவ பிரசாத், இ.கா.ப. அவர்கள் கடுமையாக எச்சரித்துள்ளார்.

-ஷாகுல் படங்கள்: ஆனந்த்

Saravana Multispeciality Hospital Pvt. Ltd., Madurai,

Leave A Reply

Your email address will not be published.