பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒட்டுனர் உரிமம் இல்லாமல் வானங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை !
பள்ளி கல்லூரி மாணவர்கள் ஒட்டுனர் உரிமம் இல்லாமல் வானங்களை ஓட்டினால் பெற்றோர் மீது நடவடிக்கை
சேலம் மாநகர போக்குவரத்து காவல் துறை எச்சரிக்கை !
சேலம் மாநகரில் விபத்தை குறைக்க எடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரிகள் செல்லும் மாணவர்கள் ஓட்டுநர் உரிமம் இல்லாமல் (Driving License) இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனத்தை ஓட்ட கூடாது மீறுவோர் மீதும் அவர்களின் பெற்றோர்கள் மீதும் மோட்டார் வாகன சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும் இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணியாமல் செல்வதோ, மூன்று பேர் அமர்ந்து செல்வதோ, நான்கு சக்கர வாகனத்தில் சீட்பெல்ட் அணியாமல் செல்வதோ, கைப்பேசி பேசிக்கொண்டு செல்வதோ, ஒருவழி பாதையில் எதிர்திசையில் செல்வதோ, போக்குவரத்து விதிகளை மதிக்காமல் வாகனம் ஒட்டுவதோ கூடாது, மீறுவோர் மீது மோட்டார் நடவடிக்கை எடுக்கப்படும் என சேலம் மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
-சோழன்தேவ்