போக்குவரத்து ஊழியர்களைத் தாக்கி வழிப்பறி: சிறுவன் உள்பட 3 பேர் கைது!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

போக்குவரத்து ஊழியர்களைத் தாக்கி வழிப்பறி: சிறுவன் உள்பட 3 பேர் கைது ! அரசு போக்குவரத்துக் கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனரைத் தாக்கி வழிப்பறி செய்த சம்பவம் தொடர்பாக 16 வயது சிறுவன் உள்பட 3 நபர்களை தஞ்சை நகர மேற்கு காவல்நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமறைவாகவுள்ள மேலும் ஒரு குற்றவாளியைப் போலீஸார் தேடி வருகின்றனர்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

சம்பவம் நடைபெற்று 12 மணி நேரத்தில் அதில் தொடர்புடைய குற்றவாளிகளைப் போலீஸார் கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு போக்குவரத்துக் கழக பேருந்து ஓட்டுநர் அழகுதுரைஇ நடத்துனர் ஆறுமுகம் ஆகிய இருவரும் நேற்றிரவு பணி முடிந்து தஞ்சை ஜெபமாலைபுரம் பகுதியில் உள்ள போக்குவரத்துக் கழக டெப்போவில் கணக்குகளை ஒப்படைத்துவிட்டு வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தனர்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அப்போது ஸ்ரீனிவாசபுரம் செக்கடி அருகே மோட்டார் சைக்கிள்களில் வந்த அடையாளம் தெரியாத நபர்கள் அவ்விருவரையும் வழிமறித்தனர்.

அவ்விருவரையும் சிவகங்கை பூங்காவரை விரட்டிச் சென்று கட்டையால் தாக்கி ரூ.3500 ரொக்கம்,  வெள்ளிச் செயின் மற்றும் வாட்ச் ஆகியவற்றைப் பறித்துக் கொண்டு தப்பிச் சென்றுவிட்டனர்.


இத் தாக்குதலில் படுகாயமடைந்த ஓட்டுநர் அழகுதுரை, நடத்துனர் ஆறுமுகம் ஆகிய இருவரும் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இத் தாக்குதலைக் கண்டித்து போக்குவரத்துக் கழக ஊழியர்கள் இன்று காலை 4 மணி முதல் 5.30 மணிவரை பேருந்துகளை இயக்காமல் ஜெபமாலைபுரம் பஸ் டெப்போ முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக தஞ்சை நகர மேற்கு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் சந்திரா மற்றும் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிறுவப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீஸார் பார்வையிட்டு ஆய்வு செய்ததில், அவ்விரு போக்குவரத்துக் கழக ஊழியர்களைத் தாக்கிய நபர்களின் அடையாளம் தெரிய வந்தது.

இத் தாக்குதல் மற்றும் வழிப்பறிச் சம்பவம் தொடர்பாக, தஞ்சாவூர் காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த 16 வயது சிறுவன், மேல அலங்கம் பகுதியைச் சேர்ந்த ராமன் (22), மேல அலங்கம் கோட்டைமேடு பகுதியைச் சேர்ந்த புருஷோத்தமன் (22)  ஆகிய மூன்று நபர்களை போலீஸார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், தலைமறைவாக உள்ள காந்திபுரம் பகுதியைச் சேர்ந்த சூர்யா என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.